Bigg Boss Tamil Season 8 Day 37 இல் பிக் பாஸ் பள்ளிக்கூடம் டாஸ்கை அறிவித்தார். பள்ளிக்கூடம் டாஸ்கை அறிவித்துவிட்டு யார் யாருக்கு என்ன கதாபாத்திரம் மாணவர்கள் எந்த மாதிரி எல்லாம் செய்ய வேண்டும் என்ற முழு விவரத்தையும் அனுப்பிவிட்டார்.
பள்ளியின் Vice Principal ஆக அருண் அருணின் மனைவியாக வர்ஷினி தவிர மஞ்சரி ஜாக்குலின் ஆகியோர் டீச்சர்கள் PET டீச்சர் ஜெபிரி மீதி எல்லோரும் மாணவர்கள். அதன் போல அனைவரும் யூனிபார்ம் போட்டு தயாராகி வந்தனர். இந்த தடவை பக்காவாக பிபி பள்ளிக்கூடம் என்பது போல் சரியாக இருந்தது. ஏனென்றால் அவர்கள் அனுப்பி வைத்த பள்ளி சீருடை அனைவருக்கும் கச்சிதமாக பொருந்தி பார்ப்பதற்கு ஏதோ ஸ்கூல் போல் தான் தெரிந்தது.
அனைவரும் தங்களது கதாபாத்திரத்தை நேற்று முதல் நாள் அன்று அசத்தி விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அருண் உடைய பெர்ஃபார்மன்ஸ்சும் மிகவும் நன்றாக இருந்தது. அதற்கு இடையில் ரானவ் அன்சிதா சௌந்தர்யா ஆகியோருக்குள் மோதல் ஏற்பட்டது.
ரானவ் எந்த நல்லதை சொன்னால் கேட்டுக்கொள்கிறார் குறைய சொன்னா அவரால் கேட்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டை அன்சிதாவும் சௌந்தர்யாவும் வைத்தினர். ஆனால் ரானவ் நான் எதுவும் செய்யவில்லை என்று அருணிடம் கூறுகிறான். என்னை எல்லோரும் கிண்டல் பண்றாங்க என்று சொல்லுகிறார். எது நடந்தாலும் நான் தனியா நிற்பேன் அப்படின்னு சொல்கிறார். இப்போது தான் ராயன் தனது விளையாட்டை ஆரம்பித்திருக்கிறார் என்பது என்று தோன்றுகிறது.
ஒவ்வொருவரும் மாணவர்களாக பண்ணிய சேட்டைகள் பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருந்தது. கோபமாக இருக்கும் மனைவியை சமாதானப்படுத்தும் கணவனாக அருண் அபாரமாக தனது நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். வர்ஷணியே ஒரு புதிய பரிணாமத்தில் பார்ப்பது போல் இருந்தது ஆக மொத்தம் நேற்று முதல் நாள் டாஸ்க் பள்ளிக்கூடம் டாஸ்ட் சூப்பராக நடந்தது என்று தான் சொல்ல வேண்டும். மிகவும் என்டர்டெய்ன்மன்ட் ஆகவும் இருந்தது. அடுத்தடுத்து என்ன கலாட்டா செய்யப் போகிறார்கள் என்பதை பார்ப்போம்.