Bigg Boss Tamil Season 8 Day 35: பூதராகமான சௌந்தர்யா பிரச்சனை… எதிர்பாரா விதமாக வெளியேறிய சுனிதா!

Bigg Boss Tamil Season 8 Day 35 இல் சௌந்தர்யாவின் பிரச்சனை பூதாகரமாக மாறி இருக்கிறது. விஜய் சேதுபதி முதலில் self grooming மற்றும் manners பற்றி யார் யாருக்கு முதலில் என்ன…

bigg boss

Bigg Boss Tamil Season 8 Day 35 இல் சௌந்தர்யாவின் பிரச்சனை பூதாகரமாக மாறி இருக்கிறது. விஜய் சேதுபதி முதலில் self grooming மற்றும் manners பற்றி யார் யாருக்கு முதலில் என்ன டிப்ஸ் கொடுத்தீர்கள் என்பது போல் ஆரம்பித்தார். அதற்கு அடுத்ததாக சௌந்தர்யாவை சத்யா பேசியது பற்றி கேட்டார்.

bigg boss 89

படித்தவர்களுக்கும் manners கும் என்ன சம்பந்தம் என கேட்டார் சௌந்தர்யா. உடனே விஜய் சேதுபதியும் சத்யாவை வச்சு வாங்கி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். சத்யாவிடம் நீங்கள் வெளியே போய் அப்படி பேசி இருக்கீங்க ஆனா உள்ள சௌந்தர்யா அந்த மாதிரி இருக்கும்போது முதல்ல அப்படி உட்காரதமா ஒழுங்கா எந்திரிச்சு உட்கார என்று நீங்கள் அந்த இடத்திலேயே சொல்லி இருக்கலாமே என்று கேட்டார்.

அது சொல்லாம ஏன் வெளியே போய் அப்படி பேசுனீங்க என்று சத்யாவை நன்றாக கிழித்து எடுத்தார் விஜய் சேதுபதி. அதற்கடுத்ததாக தீபக் சௌந்தர்யாவை தேவை இல்லாமல் விளையாடும்போது திட்டியதையும் விஜய் சேதுபதி பேசினார். ஜாக்குலினை தீபக் திட்டியதையும் ஜாக்குலின் சுட்டிக்காட்டும் போது சேதுபதி தீபக்கிடம் நீங்கள் சொல்லுவது சரியான விஷயம் என்றாலும் அதை சொல்லுகிற முறை என்று ஒன்று இருக்கு. அத நீங்க பொறுமையா சொல்லி இருந்தா அவங்க அழகா கேட்டுட்டு போய் இருப்பாங்க என்று கூறினார் விஜய் சேதுபதி.

உண்மையிலேயே தீபக்கின் கேரக்டர் வரவர சுத்தமாக சரியில்லை என்று தான் சொல்ல வேண்டும். அவர் செய்வது பேசுவது எல்லாமே ஏதோ வன்மத்தை கக்குவது போல தான் இருக்கிறது. இப்படியே செய்து கொண்டிருந்தால் தீபக் விரைவில் வெளியேறி விடுவார் போல் தான் தெரிகிறது.

அடுத்ததாக விஷால் சௌந்தர்யாவின் கேரக்டரை தப்பா பேசியதை மறைமுகமாக விஜய் சேதுபதி கேட்டார். கேட்டுவிட்டு இந்த மாதிரி நீங்க ஒருத்தரோட கேரக்டரை மீடியாவில் உட்கார்ந்து பேசக்கூடாது. நீங்க ஒன்னும் பிரண்ட்ஸோட தனியா பேசல இது மீடியா மக்கள் எல்லாரும் பாக்குறாங்க உங்களுக்கு தெரியும் அந்த பொறுப்பு உங்களுக்கு இருக்கணும் அப்படின்னு ஒரு வார்னிங் கொடுத்திருக்காரு.

bigg boss 90

அடுத்ததாக யாரும் எதிர்பாராத விதமாக சுனிதா விட்டாகி வெளியே சென்றார். ஆனால் போகும்போது நன்றாக அனைவரிடம் பேசிவிட்டு அறிவுரை கூறி சென்றார். ஆனால் இது மிகவும் எதிர்பாராத ஒரு சம்பவம் தான். சாட்சனா போன்றோர் உள்ளே இருக்கும்போது சுனிதாவை வெளியே அனுப்பியது நியாயமாக தெரியவில்லை.

ஆனால் பார்வையாளர்களுக்கு தோன்றுவது என்னவென்றால் இப்போது வந்த wildcard ஆறு பேரும் சரியாக இல்லை. அதனால் சுனிதாவை வெளியேற்றிவிட்டு இன்னும் ஓரிரு வாரங்கள் கழித்து மீண்டும் சுனிதா உள்ளே வருவார் என்று தான் தோன்றுகிறது. அப்படி அவர் வந்தால் கட்டாயம் ஆட்டம் சூடு பிடிக்கும்.