Bigg Boss Tamil Season 8 Day 34: Wildcard போட்டியாளர்கள் வந்ததே Waste எனக்கூறிய Housemates… திடுக்கிட்ட விஜய் சேதுபதி!

Bigg Boss Tamil Season 8 Day 34 வீகென்ட் எபிசோட் நடந்தது. முதலாவதாக வந்ததும் Wildcard கண்டஸ்டண்ட் பற்றி தான் விஜய் சேதுபதி விசாரித்தார். பழைய ஹவுஸ் மேட்ஸ்களிடம் அவர்கள் வந்ததுக்கு பிறகு…

bigg boss

Bigg Boss Tamil Season 8 Day 34 வீகென்ட் எபிசோட் நடந்தது. முதலாவதாக வந்ததும் Wildcard கண்டஸ்டண்ட் பற்றி தான் விஜய் சேதுபதி விசாரித்தார். பழைய ஹவுஸ் மேட்ஸ்களிடம் அவர்கள் வந்ததுக்கு பிறகு வீடு எப்படி இருக்கிறது உங்களது போட்டி எந்த மாதிரி மாறி இருக்கிறது என்பதை பற்றி கேட்டார்.

bigg boss 86

ஆனால் பழைய ஹவுஸ்மேட் அனைவருமே ஒரே வார்த்தையில் இந்த ஆறு பேரும் wildcard போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்ததற்கு வராமல் இருந்திருக்கலாம். உள்ளே வந்த அன்று எல்லோரும் நான் அப்படி பண்ணிடுவேன் இப்படி பண்ணிடுவேன் அப்படி இப்படின்னு சொன்னாங்க. ஆனா போற போக்க பாத்தா எங்களோட அவங்க தான் ரொம்ப டவுனா இன்ட்ரஸ்ட் இல்லாம ஏன் வந்தோம்னு தெரியாம இருக்காங்க என்று கூறினார்கள்.

அதிகமாக அனைவரும் கூறியது வர்ஷினியையும் ரயானையும் தான். இவர்கள் இருவரும் எதுவுமே செய்யவில்லை என்று கூறினார்கள். உடனே விஜய் சேதுபதி இந்த ஆறு பேரையுமே நீங்கள் எதற்காக வந்திருக்கிறீர்களோ அதை செய்யுங்க இந்த வாய்ப்பு எத்தனையோ பேருக்கு கிடைக்காமல் இருக்கு உங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்து உள்ள வந்திருக்கீங்க இந்த இடத்தை யூஸ் பண்ணிக்கோங்க என்றார்.

அடுத்ததாக கடந்த வாரம் பெண்கள் இடத்திற்கு ஆண்கள் கோடு தாண்டி வரும்போது டாஸ்க் செய்யாத பிரச்சனை இரண்டு நாட்களாக நடந்தது அதை பற்றி விவாதித்தார். ஆடியன்ஸ்களிடமிருந்து இரண்டு பேர் மாசாக மூஞ்சில அடித்தார் போல் சொல்லி விட்டார்கள். அதில் ஒரு பெண்மணி அவங்க அந்த ரெண்டு நாள் போட்ட சண்டேல நாங்க அப்செட் ஆயிட்டோம். எதுக்குடா இந்த ஷோவ பாக்கறோம் அப்படிங்கற அளவுக்கு எங்களுக்கு ஆயிடுச்சு. பெண்கள் சொன்னத ஆண்கள் பண்ணி இருந்தா எவ்வளவு ஜாலியா எபிசோடு போயிருக்கும் அப்படின்னு சொன்னாங்க.

bigg boss 87

அதேபோலத்தான் பெண்கள் அணியும் உள்ள இருக்கவங்க நாங்க சொன்னது அவ்ளோ பெரிய விஷயம் கிடையாது. ஆண்களை ஈகோனால தான் செய்யாம விட்டுட்டாங்க அப்படிங்கற மாதிரி கலந்துரையாடல் நடந்தது. இதுபோலத்தான் எப்படி விஜய் சேதுபதி எப்படி உங்களுக்கு டாஸ் கொடுக்க வேண்டும் என்று நான்கு வாரங்கள் கடந்தது உங்களுக்கு எப்படி தோன்றியது என்று கேட்டார். அதையும் அவர்கள் விவரித்து கூறினார்கள். இதுபோலத்தான் கலந்துரையாடல் எபிசொட் முழுவதும் நடந்து கொண்டிருந்தது.

இன்னும் விஷால் சௌந்தர்யாவை கேலி கிண்டல் செய்தது பற்றி விஜய் சேதுபதி பேசவில்லை. அது ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளைக்கு என்ன சம்பவம் இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.