Bigg Boss Tamil Season 8 Day 32: Housemates க்கு கிடைத்த புனைப்பெயர்கள்… கலகலப்பாக முடிந்த மொட்டை கடிதாசி டாஸ்க்!

Bigg Boss Tamil Season 8 Day 32 இல் ஆண்களில் ஒருவருக்கும் பெண்களில் ஒருவருக்கும் பட்டப்பெயர் வைக்குமாறு பிக் பாஸ் கூறினார். அதன்படி ஒவ்வொருவரும் வந்து ஒவ்வொரு பட்டப் பெயர் ஒருத்தருக்கு கொடுத்தார்கள்.…

bigg boss

Bigg Boss Tamil Season 8 Day 32 ல் ஆண்களில் ஒருவருக்கும் பெண்களில் ஒருவருக்கும் பட்டப்பெயர் வைக்குமாறு பிக் பாஸ் கூறினார். அதன்படி ஒவ்வொருவரும் வந்து ஒவ்வொரு பட்டப் பெயர் ஒருத்தருக்கு கொடுத்தார்கள். புதிதாக வந்த வர்ஷினிக்கு கார்பன் பேப்பர் என்றும் சாட்சனாவுக்கு கீச்சு என்றும் பலருக்கும் பல பட்ட பெயரை கொடுத்தார்கள்.

bigg boss 80

இது சிலருக்கு காட்டமாக தான் இருந்தது. அடுத்ததாக மொட்டை கடிதாசி டாஸ்க் நடைபெற்றது. யாருக்காக நீங்க ஏதாவது சொல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவர்களுக்கு பெயர் இல்லாமல் மொட்டை கடுதாசி எழுத்துக்கள் என்ற பிக் பாஸ் கூறியிருந்தார்.

இதுதாண்டா கிடைச்சது சான்ஸ் என்று அனைவரும் வைத்து செய்துவிட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் ஒவ்வொரு மொட்டை கடுதாசியையும் படிக்கும்போது மிகவும் கலகலப்பாக இருந்தது. சிலர் ரைமிங் ஓட காமெடியாக எழுதியிருந்தார்கள். அந்த செஷன் கேட்பதற்கு மிகவும் கலகலப்பாக இருந்தது. கடந்த மூன்று நாட்களாக தீபக்கின் நடவடிக்கை எதுவுமே சரி இல்லை தேவையில்லாமல் சௌந்தர்யாவிடம் சண்டை இழப்பது முத்துக்குமாரிடம் உரண்டை இழுப்பது என தேவையில்லாத செயல்களை நிறைய செய்திருக்கிறார்.

தீபக் ஸ்ட்ராங் கன்டெஸ்டன்ட் என்று இதுவரை சொல்லப்பட்டிருந்த நிலையில் அவரது செயல்களை எல்லாம் பார்க்கும்போது விரைவில் அவர் வீட்டை விட்டு வெளியேறிடுவார் என்று தான் தோன்றுகிறது. அடுத்ததாக கடந்து வந்த பாதை டாஸ்க் நடைபெற்றது. இன்றைய தினத்தில் சௌந்தர்யா ரஞ்சித் ஆனந்தி போன்றவர்கள் தங்களது கடந்து வந் கதையை கூறினார்கள்.

bigg boss 81

இறுதியில் பாமானது தீபக் கையில் தான் இருக்கிறது. அதனால் அவர் அடுத்த வாரம் நாமினேஷன் ப்ராசஸ்க்கு நேரடியாக நாமினேட் செய்யப்படுவார் என பிக் பாஸ் அறிவித்தார். இதனால என்னவோ தீபக் கடும் கோபத்திலேயே அனைவரிடமும் பழகிக் கொண்டிருந்தார். சௌந்தர்யாவின் குரலை வைத்து வர்ஷினி ஏதோ சொல்ல போக அதை ஜாக்குலின் தட்டி கேட்டார்.

முத்துக்குமரன் ஜாக்குலின் சௌந்தர்யா ஆகிய மூவருக்கும் தற்போது பிக் பாஸ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு ஏற்பட்டு வருகிறது. ஏனென்றால் இவர்கள் மூணு பேரும் நடிக்காமல் உண்மையாக விளையாடுகிறார்கள் என்று சொல்கிறார்கள். இவர்கள் மூன்று பெரும் டாப் 3 இல் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.