Bigg Boss Tamil Season 8 Day 31: நாமினேஷன் Free Pass ஐ வென்ற ஆண்கள் அணி… உருக வைத்த அன்ஷிதாவின் கடந்து வந்த பாதை!

Bigg Boss Tamil Season 8 Day 31 இல் இந்த வைல்ட்கார்டு போட்டியாளர்கள் ஏன் உள்ளே வந்தார்கள் இவர்களை அனுப்பாமல் இருந்திருக்கலாம் என்பது போல தான் இருக்கிறது. 5 பேர் வைல்ட்கார்டு போட்டியாளர்கள்…

bigg boss

Bigg Boss Tamil Season 8 Day 31 இல் இந்த வைல்ட்கார்டு போட்டியாளர்கள் ஏன் உள்ளே வந்தார்கள் இவர்களை அனுப்பாமல் இருந்திருக்கலாம் என்பது போல தான் இருக்கிறது. 5 பேர் வைல்ட்கார்டு போட்டியாளர்கள் வருவது அதிகம் இதில் ஆறு பேரை உள்ளே கொண்டுவந்து அவர்களால் எந்த பிரயோஜனமும் இல்லாமல் வீடு கூட்டமாக அலைமோதுவது போல் தான் இருக்கிறது.

bigg boss 78

பொதுவாக வைல்ட்கார்ட் போட்டியாளர்கள் உள்ளே வந்தால் அனல் பறக்கும் வச்சு செய்வார்கள். ஆனால் இந்த தடவை எல்லோருமே டம்மி பீஸ் போன்று தான் இருக்கிறார்கள். சொல்லப்போனால் இந்த சீசனில் சிறந்த போட்டியாளர் யார் என்பதை தேர்வு செய்வது மிகவும் எளிது. ஏனென்றால் என்ன ஒரு காரணத்துக்காக எல்லோரும் உள்ளே வந்தார்களோ அதை சரியாக செய்கிறார்களா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இன்றைய எபிசோடில் நாமினேஷன் Free Pass டாஸ்க் நடைபெற்றது. இதில் அபாரமாக ஆண்கள் வெற்றி பெற்றனர். ஆண்கள் அணி கலந்துரையாடி நாமினேஷன் Free Pass ரஞ்சித் அவர்களுக்கு வழங்கினார்கள். பல வாரங்களுக்கு பிறகு இந்த வரம் நாமினேஷன் பிரீ பாஸ் ஆண்கள் அணிக்கு கிடைத்திருக்கிறது.

அடுத்ததாக இந்த வாரம் விஜய் சேதுபதி கட்டாயம் கேட்க வேண்டியது அருண் ஜாக்குலின் சாப்பிட வரும்போது தடுத்து விட்டார். இந்த வாரம் அருண் மிகவும் அதிக பிரசங்கித்தனமாக விளையாடுவது போல் இருக்கிறது. இந்த வாரம் பேசுவதற்கு விஜய் சேதுபதிக்கு நிறைய கண்டன்ட் இருக்கிறது என்று சொல்லலாம்.

அடுத்ததாக கடந்து வந்த பாதை டாஸ்க் நடைபெற்றது. அதில் பவித்ரா ஹன்சிகா சத்யா தர்ஷிகா ஆகியோர் தங்களது வாழ்க்கையில் நடந்த சோகத்தை பகிர்ந்தனர். இதில் அன்சிதா கடந்து வந்த பாதை சொன்னது மிகவும் உருக்கமாக இருந்தது. சில நாட்களுக்கு முன்பு சம்மந்திக்காக மிகவும் பிரச்சனை அன்சிதாவுக்கும் சாச்சனாவுக்கும் நடைபெற்றது.

bigg boss 79

அந்த சம்மந்தியை வைத்து பேசியது அனைவரும் மனதை உருக்க செய்தது. அன்றைக்கு சம்பந்திக்காக இவ்வளவு சண்டை போட்டேன் என்று சொன்னீர்களே ஒரு காலத்தில் அந்த சம்மந்தி தான் என்னுடைய முழு நேர சாப்பாடு என்று கூறும் போது அனைவருக்கும் கலங்கிவிட்டது. அன்சிதாவுக்கு பின்னால் இப்படி ஒரு சோகமா என்று அனைவரையும் நினைக்க வைத்து விட்டது.