Bigg Boss Tamil Season 8 Day 30 இல் ஒருவழியாக கோடு தாண்டும் பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டது. அனைவரும் பேசிப் பேசி கடைசியில் இந்த பிரச்சினையை பிக் பாஸுடம் கொண்டு சென்று விட்டனர். இரண்டு பக்கமும் அமர வைத்து பேசி முடிவெடுக்கும் பதில் கூறினார். ஆனாலும் பிக் பாஸ் நான் அழைக்கும் போது ஸ்டோர் ரூமுக்கும் கன்பசன் ரூம்க்கு வரும்போது எந்த ஒரு டாஸ்கும் செய்ய தேவை இல்லை என்று தெளிவாக கூறியிருந்தார்.
ஆனால் லிவிங் ரூம் ஏரியாவில் ஏதாவது டாஸ் படிப்பதற்காக அவர்கள் வந்திருந்தால் அன்றாட வேலைகளை பார்க்கலாம் என்ற பிக் பாஸ் சொன்னதுக்கு பிறகு 30 செகண்ட் உள்ளே அவர்கள் வெளியேறிவிட வேண்டும் என்று பெண்களை அணி சொன்னதை ஆண்கள் சரி என்று ஒப்புக்கொண்டனர்.
அடுத்ததாக சௌந்தர்யா நேற்று அப்படி நடந்ததற்காக சத்யாவிடம் மன்னிப்பு கேட்டார். சாச்சனா பெண்கள் அணியில் நடக்கும் சில விஷயங்களை முத்துக்குமாரிடம் சென்று அப்படியே சொல்லி இருக்கிறார். இது தெரியவந்தவுடன் சௌந்தர்யா தர்ஷிகா அனைவரும் சாச்சானாவிடம் சண்டை இடுகின்றனர். இதனால் ஓவராக எமோஷனல் ஆன சாச்சனா கத்த ஆரம்பித்து விட்டார்.
என்ன இந்த பொண்ணு இப்படி கத்துது சாச்சனா இந்த சீசன் ஜூலியா என்று இணையவாசிகள் பேசி வந்தனர். ஏனென்றால் சாச்சானா அப்படியே இங்கு நடப்பதை அங்கும் அங்கு நடப்பது எங்கேயுமே கூறிக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக வீட்டு பணி டாஸ்க் நடைபெற்றது. இந்த வீட்டு பணி டாஸ்கில் ஆண்கள் அணி அபாரமாக வெற்றி அடைந்தனர்.
அடுத்ததாக வீட்டின் தலைவர் சத்யா யாரு குக்கிங் கிளீனிங் வெஷல் வாஷிங் என்பதை போல் பிரித்துக் கொடுத்தார். இது முடிந்தவுடன் கடந்து வந்த பாதை டாஸ்க் நடந்தது. இந்த கடந்து வந்த பாதை டாஸ்க் அவர்களது சொந்த வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களை விவரிக்க வேண்டும் யாருடையது சுவாரசியம் கம்மியாக இருக்கிறதோ அவர்கள் ஸ்டாப் என்று காட்டலாம்.
முதலாவதாக தீபக் விஷால் செஃப்ரி சாச்சனா ஆகியோர் தங்களது கதைகளை சொல்லி முடித்திருக்கின்றனர். சிலர் இதில் சுவாரஸ்யம் கம்மியாக இருக்கிறது என்று தீபக் கையில் பாம் வழங்கப்பட்டது. இனி அடுத்ததாக சொல்லப்படும் கடந்து வந்த பாதை டாஸ்க்களில் யாருக்கு சுவாரஸ்யம் கம்மியாக இருக்கிறதோ அவர்களுக்கு இந்த பாம் அப்படி சர்குலேட் ஆகும் என்பது போல் தான் தெரிகிறது.