Bigg Boss Tamil Season 8 Day 27: ஆள் மாறாட்டம் டாஸ்கின் சாராம்சத்தை கூறிய விஜய் சேதுபதி… Personal Vengence என கூறிய Housemates!

Bigg Boss Tamil Season 8 Day 27 இல் வார இறுதி எபிசோட் ஜாலியாக தான் போனது. விஜய் சேதுபதி வந்து இந்த வாரம் முழுவதும் பிக்பாஸை ஒரு திரைப்படம் பார்ப்பது போல்…

bigg boss

Bigg Boss Tamil Season 8 Day 27 இல் வார இறுதி எபிசோட் ஜாலியாக தான் போனது. விஜய் சேதுபதி வந்து இந்த வாரம் முழுவதும் பிக்பாஸை ஒரு திரைப்படம் பார்ப்பது போல் இருந்தது அவ்வளவு மன நிறைவாக சந்தோஷமாக இருந்தது என்று கூறினார். அடுத்ததாக Housemates அனைவரும் எங்களுக்கும் இந்த வாரம் மிகவும் எமோஷனலாக இருந்தது. நீங்கள் வாங்கி அனுப்பிய டிரஸ் எல்லாமே எங்களுக்கு ரொம்ப பிடித்திருக்கிறது என்று கூறினார்கள்.

bigg boss 66

அடுத்ததாக எங்கள் வீட்டில் இருந்து வந்த லெட்டரை வாசிக்கும் போது நாங்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டோம் என்றும் கூறினார்கள். அடுத்ததாக விஜய் சேதுபதி ஆள்மாறாட்டம் டாஸ்கை பற்றி இவர்களின் கருத்தை கேட்க ஆரம்பித்தார். சொல்லப்போனால் இன்றைய நாள் முழுவதும் இந்த டாஸ்கை பற்றி பேசுவதிலேயே சென்றுவிட்டது.

ஒவ்வொருவரும் தங்களது கருத்தை முன் வைத்தனர். தங்களுக்கு கதாபாத்திரத்தை ஏற்று நடித்தவர்கள் எல்லாருமே ஓவர் ஆக்ட் பண்ணதாக எல்லோரும் கூறினார்கள். குறிப்பாக சௌந்தர்யா ஜாக்குலின் போன்றோர்கள் பர்சனலாக தாக்கினார்கள் என்பது போல சுனிதா குற்றச்சாட்டை வைத்தார். அதையும் விஜய் சேதுபதி கேட்டுக்கொண்டு அடுத்ததாக உங்கள் கதாபாத்திரத்தை யார் செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள் என்பதை கேட்டார்.

அதையும் எல்லோரும் பகிர்ந்து கொண்டார்கள். பின்னர் வரன் பார்க்கும் ஒரு டாஸ்க் நடைபெற்றது. அதைப்பற்றி விவாதித்து கொண்டார்கள். சௌந்தர்யா எந்திரித்து பேசும்போது ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதை பார்த்தவுடன் சுனிதா அன்ஷிதா தர்ஷிகாவிற்கு சௌந்தர்யாவுக்கு இவ்வளவு ஆதரவா என்று ஆச்சரியப்பட்டு விட்டனர்.

bigg boss 67

தீபாவளி எபிசோட் நடந்ததாலே என்னவோ நேற்றைய தினம் விஜய் சேதுபதி எதுவுமே கண்டிப்பாக கேட்கவே இல்லை. இனி இன்று வைல்ட் கால்டு கண்டஸ்டண்ட்ஸ் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதாக ஏற்கனவே தகவல் வெல்வந்த நிலையில் இன்றைய புரோமோவில் விஜய் சேதுபதி அதை உறுதி செய்து இருக்கிறார். கிட்டத்தட்ட ஐந்து முதல் ஆறு போட்டியாளர்கள் உள்ளே செல்ல இருப்பதாகவும் இந்த வாரம் எலிமினேஷன் இல்லை அதனால் வருகிற வாரம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது. யார் அந்த வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.