Bigg Boss Tamil Season 8 Day 22-ல் விஜய் சேதுபதி குரூப்பீசம் 5 பேர் கொண்ட விழா கமிட்டி என்று அன்சிதா சுனிதா தர்ஷிகா ஜாக்குலின் ஆனந்தி ஆகியோரை சொன்னது அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அனைவரும் நாங்கள் குரூப் கிடையாது நாங்கள் தனித்துவமாக தான் விளையாடுகிறோம் என்று தங்களைப் பற்றி நல்லவங்களாக காட்டிக் கொள்ளவே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனந்தி அதுவும் விஷபாட்டில் என்பதற்கு தகுந்தார் போல் பழியை தூக்கி அடுத்தவர்கள் மீது போட்டுக் கொண்டே இருக்கிறார். ஜாக்குலின் ஒரு புறம் நான் யார் கூடயும் குரூப்பா சேர்ந்து விளையாடலையே பின்னர் நான் எப்படி இந்த குரூப்புக்குள்ள வந்து நான் சேர்ந்தேன். அது எப்படி நடந்துச்சு எல்லா இடத்திலும் நான் தனியா தானே என்னோட கருத்துக்கள் எல்லாம் எடுத்து வைக்கிறேன் எப்படி குரூப்புன்னு சொல்லலாம் எப்படி செய்தார்கள் என்று ஒவ்வொரு இடத்திலும் பேசிக் கொண்டே இருக்கிறார்.
இறுதியாக அனைவரும் பெட்ரூம்க்குள் இருக்கும் போது இந்த பிரச்சனை வந்துவிட்டது. அப்போது சாச்சனாவிடம் எல்லோரும் கேட்கிறார்கள் நாங்கள் எப்படி குரூப் ஆனோம் எப்படி நீங்களே சொல்லலாம் அப்படின்னு கேட்கிறார்கள். உடனே சாச்சனா நீங்க எல்லாரும் அப்படித்தான் பண்ணிட்டு இருக்கீங்க என்ன நல்ல விஷயம் ஃபன் பண்ணனும்னா கூட அஞ்சு பேர் சேர்ந்து தான் இருக்கீங்க வெளியே கூட அப்படித்தானே தெரியுது என்று புரிய வைக்கிறார்.
அடுத்ததாக இந்த வாரம் கேப்பிட்டன்சி டாஸ்க் நடைபெற்றது. ஆனந்தியும் முத்துக்குமாரும் விளையாடினார்கள். இறுதியில் முத்துக்குமார் போட்டியில் வெற்றி பெற்று இந்த வார பிக் பாஸ் வீட்டின் தலைவராக ஆனார். அடுத்ததாக வீட்டில் யார் ஸ்வாப் செய்வது போன்ற கலந்துரையாடல் நடைபெற்றது. அதில் பெண்கள் அணியில் இருந்து ஆண்கள் அணிக்கு சௌந்தர்யாவும் ஆண்கள் அணியில் இருந்து பெண்கள் அணிக்கு விஷாலும் இடம் மாறி இருந்தனர்.
அதற்கு அடுத்ததாக நாமினேஷன் பிராசஸ் நடந்தது. நேரடி நாமினேஷனில் சாச்சனா தீபக்கையும் ஜெபிரி அன்சிதாவையும் நாமினேட் செய்தார்கள். இந்த முறை பிக் பாஸ் பெண்கள் அணி ஆண்களையும் ஆண்கள் அணி பெண்களை நாமினேட் செய்ய வேண்டும் என்று கூறிவிட்டார். இறுதியில் இந்த வாரம் நாமினேஷனில் இருப்பவர்கள் சுனிதா, அன்சிதா, ஜாக்குலின், பவித்ரா, அருண், ஆனந்தி, ரஞ்சித், தீபக் ஆகியோர் தான். இது மிகவும் கடினமானதாக தான் இருக்கிறது. இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார் என்பதை போகப் போக டாஸ்க் நடத்தும் போது பார்த்தால் தெரியும்.