Bigg Boss Tamil Season 8 Day 20: Groupism நடப்பதை போட்டுடைத்த சௌந்தர்யா… ஆண்கள் அணியை எச்சரித்த விஜய் சேதுபதி!

Bigg Boss Tamil Season 8 Day 20 நேற்று வார இறுதி எபிசோட் அமோகமாக தொடங்கியது. கடந்த வார எபிசோடுக்குப் பிறகு நெட்டிசன்கள் விஜய் சேதுபதியை வெகுவாக விமர்சித்து வந்தார்கள். அதற்கு காரணம்…

bigg boss

Bigg Boss Tamil Season 8 Day 20 நேற்று வார இறுதி எபிசோட் அமோகமாக தொடங்கியது. கடந்த வார எபிசோடுக்குப் பிறகு நெட்டிசன்கள் விஜய் சேதுபதியை வெகுவாக விமர்சித்து வந்தார்கள். அதற்கு காரணம் இவர் ஹவுஸ் மேட்ஸ்க்கு மரியாதை தராமல் ட்டம் தட்டி பேசுகிறார் என்று கூறியதன் காரணமாக இன்றைய எபிசோடில் எடுத்த உடனே அனைவருக்கும் பாராட்டு மழையை பொழிந்தார் விஜய் சேதுபதி.

bigg boss 45

ஒவ்வொருவரின் பெர்ஃபார்மன்ஸையும் எடுத்துக்கூறி நல்லா இருந்தது என்று கூறினார். அதற்கு அடுத்ததாக காயின் டாஸ்க்கில் ஆண்கள் அணி பெண்களைப் போட்டு அமுக்கி விளையாடியதைப் பற்றி வெகு நேரம் கலந்துரையாடினார் விஜய் சேதுபதி.

நீங்கள் ஆடிய இந்த டாஸ்கல் என்டர்டைன்மென்ட் எதுவுமே இல்லை எதற்காக இப்படி செய்தீர்கள் என்று கேட்கும்போது எல்லாரும் முத்துக்குமாரை கை காமித்து அவர்தான் இந்த strategy கூறினார் என்று அவர் மேல் பழியை தூக்கி போட்டார்கள். முத்துக்குமாரை வச்சு செய்து விட்டார் விஜய் சேதுபதி என்று தான் கூற வேண்டும்.

நீங்கள் விளையாடியது பார்ப்பதற்கு என்டர்டைன்மென்ட்டாக இல்லை என்பதையும் தாண்டி வெளியே இருந்து பார்த்த எங்களுக்கு வந்து பதறுச்சு அந்த அளவுக்கு நீங்க பெண்களை போட்டு அமுக்கி அவங்க கழுத்தை புடிச்சு காலை பிடித்து அப்படி பண்ணிட்டீங்க எதுக்காக இந்த ஆக்ரோஷமான விளையாட்டு. காயின் என்ன பெரிய விஷயமா உங்களுக்கு எத்தனை காயின் வேணும் நான் இங்க இருந்து அனுப்பி விடட்டுமா அப்படின்னு நன்றாக கிழித்து விட்டார் விஜய் சேதுபதி என்று தான் சொல்ல வேண்டும்.

அதற்கு அடுத்ததாக சௌந்தர்யா குரூப்பீசமாக ஆனந்தி, அன்சிதா, சுனிதா, ஜாக்குலின், தர்ஷிகா ஆகியோர் இருப்பதாகவும் தன்னை எதிலும் சேர்ப்பதில்லை என்றும் குற்றச்சாட்டை கூறினார். இதை எடுத்து விஜய் சேதுபதி இரண்டு தரப்பினருக்கும் இடையே கேட்டு விசாரித்தார்.

bigg boss 46

தர்ஷிகா நாங்க எல்லா இடத்திலேயே சௌந்தர்யாக்கு வாய்ப்பு கொடுத்தோம் அவ அந்த வாய்ப்புல பயன்படுத்தி அதுல தன்னுடைய திறமையை காட்டியிருந்தால் எல்லாருக்கும் அவளை தெரிஞ்சுருக்கும். ஆனா அவ வந்து அப்படி செய்றதில்லை என்று கூறினார். சுனிதாவோ நம்ம சொல்றத எதிர்பக்கமாக இருக்கிற சௌந்தர்யா காது கொடுத்து கேட்கவே மாட்டேன்றாங்க என்று கூறுகிறார். ஆனால் சௌந்தர்யா இறுதியில் போன வாரங்களில் இந்த வாரம் எனக்கு நிறைய வாய்ப்பு கொடுத்தாங்க என்று சொல்லி முடித்தார்.

இந்த எபிசோடில் அந்த காயின் டாஸ்க் பற்றிய விவாதம் முடிந்தது. இனி நாளைய எபிசோடில் பிபி ஹோட்டல் டாஸ்க் தனிமனித தாக்குதல் வைத்து விளையாடினார்களா என்பதை பற்றி விஜய் சேதுபதி கலந்துரையாடுவார் என்பது போல் தெரிகிறது. அதைப் பொறுத்து இருந்து பார்ப்போம்.