Bigg Boss Tamil Season 8 Day 18: வாக்குவாதத்தில் முடிந்த பிபி ஹோட்டல் டாஸ்க்… கவனத்தை ஈர்த்த சௌந்தர்யா!

Bigg Boss Tamil Season 8 Day 18 இல் ஆண்கள் அணியும் பெண்கள் அணியும் ஒருவர் ஹோட்டலில் நடத்துபவராகவும் மற்ற அணியினர் விருந்தினராகவும் வந்தனர். கடந்த இரண்டு நாட்களிலும் ஆண்கள் அணியை விட…

bigg boss

Bigg Boss Tamil Season 8 Day 18 இல் ஆண்கள் அணியும் பெண்கள் அணியும் ஒருவர் ஹோட்டலில் நடத்துபவராகவும் மற்ற அணியினர் விருந்தினராகவும் வந்தனர். கடந்த இரண்டு நாட்களிலும் ஆண்கள் அணியை விட பெண்கள் அணியினர் சிறப்பாக இந்த டாஸ்கை கொண்டு சென்றார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

bigg boss

அவர்கள் ஹோட்டல் நடத்துபவராக இருக்கும்போதும் சரி விருந்தினராக வரும்போதும் சரி என்டர்டைன்மென்ட்க்கு பஞ்சம் இல்லாமல் நிறைய கொடுத்தனர். இறுதி நாளான இன்று பிக் பாஸ் ஆண்கள் அணியிலும் பெண்கள் அணியிலும் யாரு பெஸ்ட் பெர்பார்மர் யார் ஓர்ஸ்ட் பெர்ஃபார்மர் என்பது போல ஓட் போல் வைத்து நடத்தினார்.

அதில் பெஸ்ட் ஒர்ஸ்ட் என இரண்டு அணியையும் பிரித்து விட்டனர். பெஸ்ட் Performer அணியில் ஜெபிரி, அருண், ரஞ்சித், முத்துக்குமார், பவித்ரா, தர்ஷா, தர்ஷிகா, புனிதா ஆகியோர் இருந்தனர். கடைசியில் பிக் பாஸ் ஒஸ்ட் பெர்ஃபார்மர் வாங்கியவர்கள் எல்லாம் ஹோட்டல் நடத்த போவதாக இருக்க வேண்டும் பெஸ்ட் Performers விருந்தினராக வரவேண்டும் என்று இறுதி நாள் டாஸ்க்கை கொடுத்தார்.

இதில் விருந்தினராக வந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதாபாத்திரம் ஏற்று வந்தனர். அருண் சுனிதா திருமணமான தம்பதி போலவும் ரஞ்சித் ஜெஃப்ரே டான்ஸ்ர்களாகவும் பவித்ரா கஜினி சூர்யாவாகவும் தர்ஷா அந்நியன் விக்ரமாகவும் முத்துக்குமார் ஹோட்டல் பார்ட்னர்களில் ஒருவராகவும் வந்தனர்.

ஆனால் ஒர்ஸ்ட் பெர்பார்மாராக இருப்பவர்கள் என்னதான் நன்றாக கொண்டு சென்றாலும் கொஞ்சம் பேட் ரிவியூஸ் கொடுத்தனர். இறுதியில் அது வாக்குவாதம் ஆக வந்தது. அப்போது ஒவ்வொருத்தராக வந்து இது குறைகள் என்று கூறும் போது கடைசியில் மேனேஜராக இருந்த சௌந்தர்யா எல்லாவற்றிற்கும் பதில் சொல்ல வேண்டியதாக இருந்தது.

bigg boss

இதில் தான் சௌந்தர்யா நேற்றைய எபிசோடில் கவனத்தை ஈர்த்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அப்படி வைத்த குற்றச்சாட்டுகள் எல்லாம் தான் காமெடியாக பதில் கூறினார். இது சிரிக்க வைக்கும் படியாக தான் இருந்தது. ஒரு கட்டத்தில் முத்துக்குமார் சொன்ன குற்றச்சாட்டுகளுக்கு ஆனந்தி பதில் சொல்ல முடியாமல் அழுதுவிட்டார். அது அவர் அழுது சமாளிப்பது போல் தான் தெரிந்தது. எல்லாம் கேட்டு முடித்து விட்ட பிக் பாஸ் இந்த ஹோட்டல் டாஸ்க் இத்துடன் நிறைவடைந்தது என்று கூறினார்.

Haier விளம்பர டாஸ்க் நடைபெற்றது. இனி நாளை யார் பெஸ்ட் பெர்ஃபார்மர் இந்த வாரம் முழுவதும் யாரு ஓர்ஸ்ட் என்ற டாஸ்க் நடக்கும். அதில் தலைவருக்கான போட்டிக்கு தேர்ந்தெடுப்பதாக ப்ராசஸ் நடைபெற வாய்ப்பு இருக்கிறது. இந்த அடுத்த வார தலைவராக போவதற்கு வாய்ப்பிருக்கிறது என்று பார்க்க போனால் சுனிதா மற்றும் பவித்ரா தலைவர் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.