Bigg Boss Tamil Season 8 Day 17: பிபி ஹோட்டலில் விருந்தினராக வந்து அசத்திய பெண்கள் அணி… Performance இல் சொதப்பிய ஆண்கள் அணி!

Bigg Boss Tamil Season 8 Day 17 இல் பிபி ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாறுகிறது. பெண்கள் அணி கெஸ்டாக வருகின்றனர். ஆண்கள் அணி ஹோட்டலை நடத்துபவர்களாக இருக்கின்றனர். பெண்கள் அணியின் ஆரம்பமே அட்டகாசமாக…

bigg boss

Bigg Boss Tamil Season 8 Day 17 இல் பிபி ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாறுகிறது. பெண்கள் அணி கெஸ்டாக வருகின்றனர். ஆண்கள் அணி ஹோட்டலை நடத்துபவர்களாக இருக்கின்றனர். பெண்கள் அணியின் ஆரம்பமே அட்டகாசமாக ஆரம்பித்தார்கள். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக கேரக்டர் என பிரித்து கொடுத்து மிகவும் சுவாரஸ்யமாக கொண்டு செல்வதற்கு திட்டமிட்டனர்.

bigg boss 36 1

ஆனந்தியும் பவித்ராவும் மாமியார் மருமகளாகவும் அன்சிகா ஜெபிரி பாட்டியும் பேரனுமாகவும் நடிகையாக தர்ஷா குப்தா மாடலாக சௌந்தர்யா என ஒவ்வொருத்தருக்கு ஒரு தனித்தனி கேரக்டர் கொடுத்து உள்ளே வந்து பிச்சு உதறிவிட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

ஆண்கள் அணியை ஒருத்தாரைக் கூட ரெஸ்ட் எடுக்க விடாமல் மாறி மாறி ஒவ்வொரு பெர்பார்மன்ஸ் ஆக செய்து கொண்டு இருந்தார்கள். ஆண்கள் அணி சற்று திணறி விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் ஆண்கள் அணி நன்றாக பெர்ஃபார்மன்ஸ் செய்யவில்லை இதை பிக் பாஸ் கூப்பிட்டு நல்லா இல்லை என்று கூறி மறுபடியும் ஆரம்பிக்க செய்திருக்கிறார்.

ஆண்கள் அணி எல்லாவற்றிலும் மத்த சீசன்களை போல் ஈடுபாட்டுடன் செய்தால் நன்றாக இருக்கும். ஆனால் அவர்களுக்குள் ஒரு ஈடுபாடோ டெடிகேஷனோ இல்லை என்பது போல் தான் தோன்றுகிறது. என்டேர்டைன்மெண்ட் என்று வரும்போது ஆண்கள் அணியில் விஷால் பயங்கரமாக டான்ஸ் ஆடினார் லேடி கெட்டப் போட்டு ஆடினார்.

bigg boss

அப்போது பெண்கள்தான் பாட்டு படி உற்சாகப்படுத்தி எல்லாமே செய்தார்களே தவிர ஆண்கள் அணி மற்ற அனைவரும் அமைதியாக உட்கார்ந்து போல் தான் இருந்தது. இனி நாளைக்கு இந்த டாஸ்க் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். மொத்தத்தில் இன்று ஆண்கள் அணி சொதப்பலோ சொதப்பல் தான்.