Bigg Boss 9 Tamil : ஒவ்வொரு வருடமும் டிவி பார்வையாளர்கள் எந்த நிகழ்ச்சிக்கு காத்திருப்பார்களோ இல்லையோ பிக் பாஸ் எப்போது ஆரம்பமாகும் என எதிர்பார்க்கத் தொடங்கி விடுவார்கள். கடந்த ஆண்டு ஆரம்பமான பிக் பாஸ் நிகழ்ச்சியில் முத்துக்குமரன் டைட்டில் வென்றிருந்தார். கடந்த ஜனவரி மாதம் இந்த நிகழ்ச்சி முடிவடைந்ததையடுத்து, அடுத்த சீசனுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பும் சமீபத்தில் வெளியாகி இருந்தது.
விஜய் சேதுபதி மாஸ்
தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் ஏழு சீசன்களை நடிகர் கமல்ஹாசன் மிக வெற்றிகரமாக தொகுத்திருந்த நிலையில், கடந்த சீசனில் விஜய் சேதுபதி முழு நேர தொகுப்பாளராக களமிறங்கி இருந்தார். கமல் இடத்தை முதலில் விஜய் சேதுபதியால் நிரப்ப முடியுமா என்ற கேள்வி பெரிதாக இருந்தது. கமல்ஹாசனை போலவே பார்வையாளர்களில் லெஃப்ட் ரைட் வாங்குவது, பிரச்சனை என வரும்போது சரியான போட்டியாளர்களுக்கு துணை நிற்பது என கமலின் ஃபார்முலாவை விஜய் சேதுபதியும் மிக கச்சிதமாக செய்து வருவதால் ஒரே சீசனில் பலரது மனதையும் அவர் கவர்ந்து விட்டார்.

இதனால் பிக் பாஸ் 9 வது சீசனுக்கு தயாராகும் பார்வையாளர்கள் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை முன்னெடுத்துச் செல்வது எப்படி இருக்கும் என்பதை பார்க்கவும் ஆர்வமாக இருந்து வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சி ப்ரோமோ வீடியோக்கள் சமீபத்தில் வெளியாகி இருந்த நிலையில் அக்டோபர் ஐந்தாம் தேதி நிகழ்ச்சி ஆரம்பமாகும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எப்போதும் போல பிக்பாஸ் நிகழ்ச்சி தங்களது போட்டியாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்பாகவே எந்த பிரபலங்கள் எல்லாம் களமிறங்கப் போகிறார்கள் என்பது பற்றிய சில தகவல்கள் வலம் வந்து கொண்டே இருக்கும்.
திவாகருக்கு போட்டி..
அந்த வகையில் இந்த முறை சீரியல் நடிகை பரீனா ஆசாத், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் களமிறங்கிய நடிகர் உமைர், ஜனனி அசோக்குமார், அகமது மீரான், KPY ராஜவேலு உள்ளிட்ட பலரது பெயர்களும் அடிபட்டு வருகிறது. அந்த வகையில் இந்த பட்டியலில் புதிதாக ஒருவரது பெயரும் அடிபட்டு வருகிறது.
சமூக வலைத்தள பிரபலங்கள் போட்டியாளர்களாக இடம்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சர்ச்சைகளுக்கு பெயர் போன வாட்டர்மெலான் ஸ்டார் திவாகர் இருப்பார் என தெரிகிறது. இதனிடையே, அவரை கலாய்க்கும் விதமாக சரியான ஒரு போட்டியாளரை பிக் பாஸ் களமிறக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
பட்டிமன்ற மேடைகளில் தனது வேடிக்கை பேச்சுக்களால் ரசிகர்களை கவர்ந்த பேச்சாளர் மஞ்சுநாதன் பிக் பாஸ் 9 வது சீசனில் களமிறங்குவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. மேடையில் வார்த்தைகளில் சிரிப்பு பட்டாசை உருவாக்கும் இவர், திவாகருக்கு சரியான பதிலடியாக இருப்பார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
நான் கடந்த 7 ஆண்டுகளாக பல வலைத்தளங்களில் கிரிக்கெட், சினிமா தொடர்பான செய்திகளை சுவாரஸ்யம் குறையாமல் வாசகர்கள் விரும்பும் வகையில் எழுதி வருகிறேன். இணையத்தில் இன்று ஏராளமான செய்திகள் சரியான விவரங்கள் இல்லாமல் வெளியாகி வரும் சூழலில் முடிந்த அளவுக்கு சிறந்த செய்திகளை கொடுப்பதற்கு நான் முன்னுரிமை கொடுத்து எழுதி வருகிறேன்.

