Bigg Boss 9 Tamil New Rules : தமிழில் 9 வது பிக் பாஸ் சீசன் மிக விரைவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் அந்த நாளையும் ரசிகர்கள் ஏற்கனவே எதிர்பார்க்கத் தொடங்கி விட்டனர். நடிகர் கமல்ஹாசனுக்கு பிறகு கடந்த சீசன் முதல் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் நிலையில், இந்த முறையும் அவரே களமிறங்குகிறார். அவரது ப்ரோமோ வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றிருந்த நிலையில் அக்டோபர் 5 ஆம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாக உள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மிகப்பெரிய ஹிட் காரணமே அந்த வீட்டுக்குள் நடக்கும் சர்ச்சை சம்பவங்கள் மற்றும் நிறைய பிரச்சனைகளை சுற்றி போவது தான். ஹிந்தி மட்டுமில்லாமல் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் பிக் பாஸ் சக்கை போடு போடுவதற்கு பின்னால் இந்த காரணம் தான் உள்ளது. அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வம் பலருக்கும் இங்கே உள்ளது.
சூடு பிடிக்கும் பிக் பாஸ்..
அதே போலத்தான் பிக் பாஸ் வீட்டிற்குள் நமக்குத் தெரிந்த பல பிரபலங்கள் போட்டியாளர்களாக களமிறங்கும் போது அவர்களின் இயற்கையான சுபாவங்கள் எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்வதுடன் மட்டுமில்லாமல், அவர்கள் சண்டை போடுவது ஏதோ ஒரு விதத்தில் பார்வையாளர்களுக்கும் சுவாரசியத்தை கொடுக்கிறது. இன்னொரு புறம் போட்டியாளர்களாக பல பிரபலங்கள் களமிறங்கும் நிலையில் அவர்களுடன் மக்களோடு மக்களாக இருக்கும் சமூக வலைத்தள பிரபலங்களும் களமிறங்கும் போது அங்கே நிச்சயம் நிறைய பிரச்சனைகள் உருவாகும்.
இதுவே அடுத்தடுத்த நாட்களில் விறுவிறுப்பை அதிகரிப்பதுடன் மட்டுமில்லாமல் 100 நாட்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் உயிர்ப்புடன் வைக்க உதவுகிறது. மேலும் ஒவ்வொரு முறையும் வித்தியாசமான போட்டியாளர்கள் களமிறங்கும் அதே வேளையில் சில விதிமுறைகளும் புதிதாக பிக் பாஸ் கொண்டு வரத்தான் செய்கிறது. அந்த வகையில் இந்த முறையும் ஒரு சில விதிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.
பிக் பாஸின் புது ரூல்ஸ்
பொதுவாக ஒவ்வொரு வார இறுதியிலும் மூன்று முதல் நான்கு போட்டியாளர்கள் டேஞ்சர் சோனுக்குள் வருவதில் ஒரு போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவது வாடிக்கையாக இருக்கும். ஆனால் இந்த முறை மாஸ் எலிமினேஷன் என்ற பெயரில் மூன்று முதல் நான்கு போட்டியாளர்கள் வரை ஒரே எபிசோடில் வெளியேற்றப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி இருக்கும்போது நிச்சயம் அடுத்தடுத்த எபிசோடுகள் விறுவிறுப்பை அதிகப்படுத்தும்.
இன்னொரு புறம் மாஸ் எலிமினேஷன் செய்யப்படுபவர்களில் சிலர் சீக்ரெட் ரூமில் வைக்கப்படலாம் என்று தெரிகிறது. மாஸ் எலிமினேஷன் போலவே லைவ் வோட்டிங் என்ற பெயரில் பார்வையாளர்களை இன்னும் நெருக்கமாக்கும் ஒரு யுக்தியையும் கையாளவுள்ளது பிக் பாஸ். அதன்படி ஒவ்வொரு டாஸ்கின் போதும் பார்வையாளர்கள் லைவ் ஓட்டிங் செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் லைவ் கமெண்ட் என்ற பெயரில் லைவில் பார்வையாளர்கள் தங்களது கருத்தை தெரிவிக்கலாம் என்றும் இதன் மூலம் ஒரு வாரத்தின் சிறந்த பெர்ஃபார்மர் என்பதை பார்வையாளர்கள் தேர்வு செய்யும் வாய்ப்பும் உள்ளதாக கூறப்படுகிறது.
இதே போல லைவ் ஸ்ட்ரீமிங்கிலும் கூட புதிய அம்சங்களை பிக் பாஸ் கொண்டு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த புதிய விதிகளால் நிச்சயம் இன்னும் விறுவிறுப்பை பிக் பாஸ் உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நான் கடந்த 7 ஆண்டுகளாக பல வலைத்தளங்களில் கிரிக்கெட், சினிமா தொடர்பான செய்திகளை சுவாரஸ்யம் குறையாமல் வாசகர்கள் விரும்பும் வகையில் எழுதி வருகிறேன். இணையத்தில் இன்று ஏராளமான செய்திகள் சரியான விவரங்கள் இல்லாமல் வெளியாகி வரும் சூழலில் முடிந்த அளவுக்கு சிறந்த செய்திகளை கொடுப்பதற்கு நான் முன்னுரிமை கொடுத்து எழுதி வருகிறேன்.

