Bigg Boss 9 Tamil Contestants list : தமிழ் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9 வது சீசன் விரைவில் ஆரம்பமாகிறது.. பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு வந்தது முதலே அதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் தொடர்பான தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கும். அந்த வகையில், இந்த முறையும் ஏராளமான பெயர்கள் அடிபட்டு வந்தது. பிக் பாஸ் வீடு என வந்தாலே உள்ளே சண்டை போடவும், சர்ச்சைகளை உண்டு பண்ணவும், வேடிக்கையாக பேசி பொழுது போக்கவும் ரக ரகமாக ஆட்கள் இருப்பார்கள். அந்த வகையில் தேர்வு செய்துள்ள போட்டியாளர்களும் அப்படியான தகுதி பெற்றிருப்பவர்களாகவே தெரிகிறது.
அப்படி போட்டியாளர்களாக பிக் பாஸ் வீட்டிற்குள் களமிறங்கி இருப்பவர்களை பற்றிய தகவல்களை தற்போது பார்க்கலாம்..
வாட்டர்மெலான் ஸ்டார் திவாகர்
கஜினி படத்தில் சூர்யா வாட்டர்மெலான் சாப்பிடுவதை போல ரீல்ஸ் பதிவிட்டு வைரலானவர்.. ஆரம்பத்தில் காமெடியாக இவரை அனைவரும் பார்த்தாலும் பல பெரிய ஹீரோக்கள் தன்னை விட குறைந்த திறமையுடையவர்கள் என திவாகர் பேசியதே அவருக்கு எதிர்மறை விமர்சனத்தை உண்டு பண்ணிவிட்டது..

இவர் பிக் பாஸ் வீட்டில் நிச்சயம் அதிகம் ட்ரோல் செய்யப்பட வேண்டும் என்பதும் தனது தவறை புரிந்து கொள்ள வேண்டும் என்பதும் தான் பலரின் விருப்பமாக உள்ளது..
கெமி
விஜய் டிவியில் குக் வித் கோமாளி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் மூலம் பெயர் எடுத்தவர் தான் கெமி. மிக வேடிக்கையாக தன்னை சுற்றி இருப்பவர்களிடம் சிரித்துக் கொண்டே இருக்கும் கெமி அப்படியே பிக் பாஸ் வீட்டிலும் தொடர்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..
VJ பார்வதி
பிரபல தொகுப்பாளினியான VJ பார்வதி, சமூக வலைதளத்தில் மிக பிரபலம். சமுதாயத்தில் நடக்கும் பல பிரச்சனைகள் தொடர்பாக குரல் கொடுப்பது, துணிச்சலாக அனைத்தையும் தட்டிக் கேட்பது என இருப்பதால் பிக் பாஸ் வீட்டிலும் நிச்சயம் சவாலான போட்டியாளராக வலம் வர வாய்ப்புகள் அதிகம்..

அரோரா சிங்களயர்
ஒரே நாளில் வைரலாகி பலூன் அக்கா என்ற பெயரையும் உருவாக்கிக் கொண்டவர் தான் Aurora Sinclair. பல நாட்கள் சமூக வலைத்தளம் முழுவதும் அவரை பற்றியே பேசும் அளவுக்கு வைரலானது, இன்று பிக் பாஸ் போட்டியாளர் என்ற வாய்ப்பையும் பெற்றுக் கொடுத்துள்ளது..
கனி திரு
குக் வித் கோமாளி 2 வது சீசன் வெற்றியாளரும், பிரபல இயக்குனர் அகத்தியனின் மகளும், இயக்குனர் திருவின் மனைவியுமான கனியும் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.. கலகலப்பாக இருக்கும் கனியை அனைவரும் பார்த்திருக்க, பிக் பாஸ் வீட்டில் அவர் எப்படி இருப்பார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது..

கொங்கு மஞ்சுநாதன்
பிரபல பட்டிமன்ற பேச்சாளரும், காமெடியாக நிறைய கருத்துக்களை பேசுபவருமான கொங்கு மஞ்சுநாதனை இந்த முறை களமிறக்கியுள்ளது பிக் பாஸ். பிக் பாஸ் வீட்டில் திவாகருக்கு சரியான பதிலடி கொடுக்கும் ஆளாக, அதே நேரத்தில் நவ நாகரீக விஷயங்களை எதிர்க்கும் ஆளாக இவர் இருக்கலாம் என கருதப்படுகிறது..
Vikkals விக்ரம்
இன்று Stand Up Comedy நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் நிலையில், அதில் முக்கியமான ஒருவர் தான் விக்கல்ஸ் விக்ரம்.. இவர் வேடிக்கையாக அதே நேரத்தில் சமுதாயத்திற்கு தேவையான முற்போக்கு கருத்துக்களையும் கலந்து சொல்வதால் இவருக்கான ரசிகர்கள் பட்டாளமும் அதிகமாக உள்ளது.. சிரித்தே நாம் பார்த்த விக்கல்ஸ் விக்ரமை பிக் பாஸ் வீடு எப்படி மாற்றப் போகிறது என்பதை விரைவில் தெரிந்து கொள்ளலாம்.
இவர்களை தவிர வியானா, கானா வினோத், சபரி நாதன், FJ அதிசயம், அப்சரா CJ, கமருதீன், ராம்போ என மொத்தம் 14 போட்டியாளர்கள் களமிறங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது..
நான் கடந்த 7 ஆண்டுகளாக பல வலைத்தளங்களில் கிரிக்கெட், சினிமா தொடர்பான செய்திகளை சுவாரஸ்யம் குறையாமல் வாசகர்கள் விரும்பும் வகையில் எழுதி வருகிறேன். இணையத்தில் இன்று ஏராளமான செய்திகள் சரியான விவரங்கள் இல்லாமல் வெளியாகி வரும் சூழலில் முடிந்த அளவுக்கு சிறந்த செய்திகளை கொடுப்பதற்கு நான் முன்னுரிமை கொடுத்து எழுதி வருகிறேன்.

