Bigg boss 9 tamil : அப்போ திவாகர்.. இப்போ பார்வதி.. கட்டம் கட்டி காய் நகர்த்தும் ஆதிரை.. கேம்னா இப்டி தான் ஆடணும்..

Aadhirai about VJ Parvathy in Bigg Boss : தமிழில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஆரம்பமான பிக் பாஸ் நிகழ்ச்சியில் 9 வது சீசன் ஓரளவுக்கு கலவையான விமர்சனங்களை தான் பார்வையாளர்கள்…

Aadhirai about VJ Parvathy

Aadhirai about VJ Parvathy in Bigg Boss : தமிழில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஆரம்பமான பிக் பாஸ் நிகழ்ச்சியில் 9 வது சீசன் ஓரளவுக்கு கலவையான விமர்சனங்களை தான் பார்வையாளர்கள் மத்தியில் பெற்று வருகிறது. இதற்கு முன்பு நடந்த எந்த சீசன்களும் இந்த அளவுக்கு சுமாராக இருந்ததில்லை என்பதும் பலரது குற்றச்சாட்டாக இருந்து வரும் நிலையில், இன்னொரு புறம் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியை பொழுதுபோக்காக மட்டுமே இருக்கும் வகையில் வடிவமைத்திருக்கலாம் என்பதால் தான் சமூகவலைதளங்களில் பிரபலமாக இருக்கும் நபர்களை தேர்வு செய்திருக்கலாம் என்பதும் பலரின் கருத்தாக உள்ளது.

இந்த காலத்து தலைமுறைக்கு ஏற்ப சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் திவாகர், அரோரா, விஜே பார்வதி என போட்டியாளர்களின் தேர்வு முன்பு போல இல்லை என்றும் பலரும் குறிப்பிட்டு வரும் சூழலில் அவ்வப்போது நடைபெறும் சில சம்பவங்கள் பிக் பாஸ் வீட்டில் சிறிதாக சலசலப்பை உண்டு பண்ணி வருகிறது.

நான் வேலை பாக்க மாட்டேன்

சூப்பர் டீலக்ஸ் அணி மற்றும் பிக் பாஸ் வீடு என இரண்டு குழுக்களாக வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் சூப்பர் டீலக்ஸ் வீட்டில் இருப்பவர்களுக்காக பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும் என்றும் தெரிகிறது. இதன் பெயரில் திவாகர் மற்றும் ரம்யா ஆகிய இருவருக்கிடையே ஒரு சண்டை நடந்தது. அதே போல, பார்வதி மற்றும் சுபிக்ஷா இருவருக்கும் மிகப்பெரிய ஒரு வாக்குவாதமே உருவாகி இனிமேல் நான் உங்களுக்கு எந்த வேலையும் செய்ய மாட்டேன் என்றும் பார்வதி ஒதுங்கிவிட்டார்.

நிறைய பொழுதுபோக்கு சம்பவங்கள் நடைபெற்றாலும் அவ்வப்போது நடைபெறும் இதுபோன்ற சண்டை மற்றும் சச்சரவுகள் ஓரளவுக்கு சுவாரஸ்யத்தையும் பார்வையாளர்கள் மத்தியில் உண்டு பண்ணி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் அனைத்து போட்டியாளர்களும் முதலில் யார் வெளியேறுவார் என்பது பற்றியும் இந்த முறை டைட்டிலை யார் ஜெயிப்பார் என்பது பற்றியும் தங்கள் கருத்துக்களை கூற வேண்டும் என பிக் பாஸ் வலியுறுத்தியதாக தெரிகிறது.

பார்வதி தான் போவாங்க

அப்போது பேசும் ஆதிரை, “பார்வதி முதல் ஆளாக பிக் பாஸில் இருந்து எலிமினேட் ஆவார் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் எல்லா விஷயத்திலும் தான் பேசுவது தான் சரி, யார் என்ன சொன்னாலும் தேவையில்லாமல் அவர் மூக்கையும் நுழைக்கிறார். அதேபோல திவாகர் மற்றும் கலையரசன் ஆகிய இருவரிடமும் அவர் க்ளோசாக இருப்பதை பார்க்கும்போது அதன் மூலம் அவர்கள் இருவருடைய பார்வையாளர்களையும் தன் பக்கம் இழுக்கலாம் என பார்வதி நினைப்பதாகவே எனக்கு தோன்றுகிறது” என கூறினர்.

ஆதிரை ஏற்கனவே முதல் நாமினேஷனின் போது திவாகர் பெயரை சொன்னதுடன் அவரைப்போல சமூகவலைத்தளங்களில் ஏதாவது செய்தால் இப்படி ஒரு இடத்தை பிடிக்க முடியும் என்று தவறான எண்ணம் பார்வையாளர்களுக்கு வந்து விடுமோ என்று எனக்கு தோன்றுகிறது என்று அவர் சொல்ல அந்த காரணமும் ஆரம்பத்தில் அதிக பாராட்டுகளை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.