Bigg boss 9 tamil : கம்ருதீன் நீங்களும் இதுக்கு துணையா.. Wild Card போட்டியாளர்களுடன் சேர்ந்து பார்வதி செஞ்ச சதி.. என்ன வாய் மா உங்களுக்கு?..

Parvathy plan with Contestants : என்ன பார்வதி இவ்ளோ மோசமா ஆடுறீங்க என அவரது ரசிகர்களையே புலம்ப வைக்கும் அளவுக்கு ஒரு சதி திட்டத்தை அவர் தீட்டியது தான் அனைவரையுமே அதிர்ச்சி அடைய…

VJ Parvathy plan with wild card contestants

Parvathy plan with Contestants : என்ன பார்வதி இவ்ளோ மோசமா ஆடுறீங்க என அவரது ரசிகர்களையே புலம்ப வைக்கும் அளவுக்கு ஒரு சதி திட்டத்தை அவர் தீட்டியது தான் அனைவரையுமே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த பிக் பாஸ் சீசன் ஆரம்பித்து கிட்டத்தட்ட ஏழு வாரங்களான நிலையில் இன்று வரையிலும் இங்கு பாசிட்டிவாகவோ அல்லது நெகட்டிவாகவோ அதிக கன்டென்ட்களை கொடுப்பவர் என்றால் அது பார்வதி தான்.

தான் செய்வது தான் சரி என இருக்கும் அவர் பல நேரங்களில் எதிரில் பேசும் நபர் சொல்வது சரியாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளாமல் வேண்டும் என்று சிறிய பிரச்சனையை ஊதி பெரிசாக்குவது, அதே நேரத்தில் தனியாக கூட அந்த வீட்டில் இருக்கும் அனைவரையும் எதிர்த்து கேள்வி கேட்பது என பல நேரங்களில் அவர் செய்யும் விஷயங்கள் தவறாகவோ அல்லது சரியாகவோ நிறைய விவாதங்களை எழுப்பிக் கொண்டே தான் இருக்கிறது.

பார்வதியின் மோசமான கேம்..

கடந்த வாரம் கூட எந்த ஒரு தேவையும் இல்லாமல் ஆரோரா ஆபாச குறியீடு காண்பித்ததாக மிகப்பெரிய ஒரு பிரச்சினையை பிக் பாஸ் வீட்டுக்குள் உண்டு பண்ணியிருந்தார் பார்வதி. இதை கேள்வி எழுப்பிய விஜய் சேதுபதி அவரை கிழித்து தொங்க விட்டதுடன் மட்டுமில்லாமல் இனிமேல் இப்படி செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தி இருந்தார்.

அதேபோல விக்ரமின் குடும்பம் தொடர்பாக பார்வதி பேசியதையும் தவறு என சுட்டிக் காட்டி விஜய் சேதுபதி அவரை மிகக் கடுமையாக எச்சரித்திருந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு பின்னர் விக்ரமிடம் சென்று மன்னிப்பு கேட்கிறார் பார்வதி. இந்த சம்பவம் நடந்து முடிந்த பின்னர் தான் மற்றொரு பரபரப்பான விவாதத்தில் ஈடுபட்டிருந்தார் பார்வதி.

பொதுவாக பிக் பாஸ் வீட்டிற்குள் ஒருவர் நாமினேன் செய்ய போகும் நபரை பற்றி வெளிப்படையாக பேசக்கூடாது என்பது சொல்லப்படா விதியாக உள்ளது. ஆனால் Wild Card என்ட்ரியில் வந்த பிரஜின், திவ்யா மற்றும் சான்ட்ரா ஆகியோர் கடந்த வாரமும் நாமினேஷன் நபர்களை பற்றியும் யாரை வெளியேற்றலாம் என்பது பற்றியும் திட்டம் போட்டிருந்தனர்.

அவங்கள அனுப்பிடலாம்..

அப்படி சம்பந்தமே இல்லாமல் தங்களது தனிப்பட்ட உரிமையை மற்றொருர் சொல்லி கேட்பது என்பது பிக் பாஸ் வீட்டுக்குள் தவறு என்ற சூழலில் இந்த வாரமும் அப்படி ஒரு விவாதத்தில் பார்வதி அவர்களுடன் இணைந்து ஈடுபட்டுள்ளார். பிரஜின், சாண்ட்ரா, திவ்யா, கம்ருதீன் மற்றும் பார்வதி ஆகியோர் அமர்ந்து இந்த வாரம் யாரை நாமினேஷன் செய்யலாம் என்பது பற்றி பேசுகின்றனர்.

அப்போது பேசும் பார்வதி, ‘நாமினேட் பண்றப்ப ஒருத்தவங்க வெளிய போற ஆளா இருக்கணும், இன்னொருத்தவங்க பலமான போட்டியாரா இருக்கணும். நாமினேட் பண்ணா போகக்கூடிய ஆள் அப்படின்னு பார்த்தா கெமி, அமித்.. அப்புறம் சுபிக்ஷா போவாளா?’ என்றும் மற்ற அனைவரிடமும் கேட்கிறார். இதன் பின்னர் பேசும் பார்வதி, ‘நாம நினைக்கிற நாலு பேர் கண்டிப்பா நாமினேஷன்ல வரணும்’ என குறிப்பிட்டுகெமி, விக்ரம், சுபிக்ஷா, கனி, ரம்யா வரணும். நாம 5 பேர் இருக்கோம்.. ஆளுக்கு 2 பேர் மாத்தி குத்திட்டா போதும்என்கிறார்.

ஒருவரது நாமினேஷன் ன்பது ரகசியமான விஷயமாக இருக்க அதை இப்படி திட்டம் தீட்டி ஒருவரை வெளியேற்ற வேண்டும் என பார்வதி மற்றவர்களுடன் பேசியதை நிச்சயம் விஜய் சேதுபதி கடுமையாக கண்டிப்பார் என்பதும் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.