Bigg Boss Tamil Season 8 : உங்க ஆட்டம் முடிஞ்சுது.. சவுந்தர்யாவை எச்சரித்த வர்ஷினி.. ஆனாலும் அசராம அவர் சொன்ன பதில்..

பிக் பாஸ் வீட்டில் தற்போது விருந்தினர்களாக நுழைந்திருக்கும் ஏற்கனவே வெளியேறிய போட்டியாளர்கள் பலரும் அதிகமாக சவுந்தர்யாவை தான் இலக்காக வைத்து காய் நகர்த்தி வருகின்றனர். முத்துக்குமரன், ஜாக்குலின், தீபக், சவுந்தர்யா உள்ளிட்டோர் ஃபைனல் வரை…

Soundarya and Varshini

பிக் பாஸ் வீட்டில் தற்போது விருந்தினர்களாக நுழைந்திருக்கும் ஏற்கனவே வெளியேறிய போட்டியாளர்கள் பலரும் அதிகமாக சவுந்தர்யாவை தான் இலக்காக வைத்து காய் நகர்த்தி வருகின்றனர். முத்துக்குமரன், ஜாக்குலின், தீபக், சவுந்தர்யா உள்ளிட்டோர் ஃபைனல் வரை முன்னேறுவார்கள் என பலரும் தெரிவித்து வருகின்றனர்.

அந்த தகுதி உள்ளதன் காரணமாக தான் இவர்கள் அனைவருமே 95 நாட்களை கடந்து சிறப்பாக ஆடி வருகின்றனர். ஆனால், அதே நேரத்தில் ஏற்கனவே வெளியேறிய பேட்மேன் ரவீந்தர், வர்ஷினி, ரியா, சுனிதா, சாச்சனா உள்ளிட்டோர் உள்ளே இருக்கும் போட்டியாளர்களின் ஆட்டத்தையே அடியோடு திருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சவுந்தர்யா தான் டார்கெட்

அதிலும் குறிப்பாக, பலரும் இத்தனை நாளாக வெறுமெனே முக பாவனைகள் மூலமே ரசிகர்கள் வாக்கை பெற்ற சவுந்தர்யா சிறந்த போட்டியாளர் இல்லை என்பதை மனதில் வைத்து அவரை எமோஷனலாக சேதப்படுத்தவும் முயன்று வருகின்றனர். இதற்காக வர்ஷினி, சாச்சனா என பலரும் மிக மோசமாக திட்டம் போட்டு வரும் சூழலில் சவுந்தர்யாவும் கண்ணீர் விட்டு மனமுடைந்து போனார்.

தொடர்ந்து பிக் பாஸும் அவரை அழைத்து ஆறுதல் சொல்லி அனுப்பி இருந்தது. அப்படி இருக்கையில், வர்ஷினி, சாச்சனா ஆகியோரின் பேச்சு தன்னை எந்த விதத்திலும் பாதிக்காத வகையில் மீண்டு வந்த சவுந்தர்யா, இன்னும் பலமான ஆட்டத்தையே ஆடி வருகிறார். அப்படி ஒரு சூழலில், சவுந்தர்யா சிறந்த போட்டியாளர் இல்லை என்பதை நிரூபிக்க போராடி வரும் வர்ஷினி, அவரிடம் சில கேள்விகளை முன் வைக்கிறார்.
soundarya vs Varshini

“நீங்கள் ஒரே மாதிரி முக பாவனைகள் கொடுக்கும் போது மக்களுக்கு அது போரடிக்காதா?” என சவுந்தர்யாவிடம் வர்ஷினி கேட்கிறார். இதற்கு பதில் சொல்லும் சவுந்தர்யா, “உங்களது தினசரி வாழ்க்கையில் நீங்கள் ஒரு விஷயத்தை நாள்தோறும் செய்யும் போது இது போரடிக்கும், இது சுவாரஸ்யமாக இருக்கும் என நினைத்து கொண்டே செய்வீர்களா?.

ஆட்டம் இப்ப தான் ஆரம்பம்

நான் பேசும் வார்த்தைகள், கொடுக்கும் ரியாக்ஷன்கள் இதெல்லாம் சலிப்பாக இருக்குமா என்பதை நினைத்துக் கொண்டு என்னால் செய்ய முடியாது. அந்த சூழலுக்கேற்ப என்னால் என்ன செய்ய முடியுமோ, அந்த ரியாக்ஷனை தான் என்னால் கொடுக்க முடியும்” என தெரிவிக்கிறார். உடனடியாக பேசும் வர்ஷினி, “உங்களின் ஆட்டம் முடிந்து விட்டது என்றே நினைக்கிறேன்” என தெரிவிக்கிறார்.

ஆனால் வர்ஷினி அப்படி சொல்லியும் கொஞ்சம் கூட அசராத சவுந்தர்யா, “எனது ஆட்டமே இப்போது தான் தொடங்கி இருக்கிறது” என அதிரடியாக தெரிவித்துள்ளார்.