விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மற்ற டிஆர்பிகளை அடித்து துவைத்து வேறு லெவலாக சென்று கொண்டிருக்கிறது.
15 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் இரண்டு நாட்கள் கழித்து மீரா மிதுன் உள்ளே நுழைந்தார், 17 வது போட்டியாளராக கஸ்தூரி 50 வது நாளில் நுழைந்தார். 50 வது நாளை கொண்டாடும் விதமாக, மதுமிதா, தர்சன் மற்றும் சாண்டிக்கு மெடல்கள் வழங்கப்பட்டது.
அடுத்து சிறிது நாட்களில், வனிதா விருந்தினர் போல் உள் நுழைந்து பின்னர் வைல்டு கார்டு போட்டியாளராக அறிவிக்கப்பட்டார்.
கடந்தவாரம் 6 போட்டியாளர்கள் இருந்தநிலையில், பிக் பாஸ் 5 லட்சம் பணத்தைக் கொடுக்க, அந்த ஆஃபரை பயன்படுத்திக் கொண்ட கவின் உடனே வெளியேறினார்.
கடந்தவாரம் வரை வெற்றியாளராக கொண்டாடப்பட்டு வந்து தர்சன், திடீரென வெளியேற்றப்பட்டார், தற்போது 4 போட்டியாளர்களுடன் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி 100 வது நாளுக்குள் அடி எடுத்து வைத்துவிட்டது.