Bigg Boss 9 Tamil: அத நீ பேசாத.. அப்படி அவரு செஞ்சாருனா.. ஊரே கலாய்த்த திவாகரை பற்றி பேசிய அரோரா.. ப்பா, செம க்ளாரிட்டி..

Bigg Boss 9 Tamil Aurora Sinclair about Diwakar : பிக் பாஸ் 9 வது சீசன் ஆரம்பமாகி ஒரு சில நாட்களான சூழலில் அதிகமாக இங்கே பலரும் பேசும் ஒரு போட்டியாளர்…

Aurora about Diwakar

Bigg Boss 9 Tamil Aurora Sinclair about Diwakar : பிக் பாஸ் 9 வது சீசன் ஆரம்பமாகி ஒரு சில நாட்களான சூழலில் அதிகமாக இங்கே பலரும் பேசும் ஒரு போட்டியாளர் என்றால் அது வாட்டர்மெலான் ஸ்டார் திவாகரை பற்றித் தான். முதல் நாளில் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சமயத்தில் பார்வையாளர்கள் பலருக்கும் கொஞ்சம் ஏமாற்றம் தான் இருந்தது. முந்தைய சீசன்களை போல போட்டியாளர்கள் இல்லை என்றும் இதில் பலர் அமைதியாக அல்லது பிக் பாஸ் நிகழ்ச்சியை முன்னெடுத்து செல்ல முடியாமல் இருக்கும் குணம் உள்ளவர்கள் என்று தான் குறிப்பிட்டு வருகின்றனர்.

ரம்யா ஜோ, சுபிக்ஷா, VJ பார்வதி, சபரிநாதன், விக்கல்ஸ் விக்ரம் உள்ளிட்ட ஒரு சில போட்டியாளர்கள் மீது எதிர்பார்ப்பு இருக்கும் அதே வேளையில், திவாகர், பிரவீன் காந்தி, வியானா என பலரும் வேண்டுமென்றே ஏதேதோ செய்து கொண்டிருப்பதாக தான் பலரும் சொல்கின்றனர்.

மீண்டும் மீண்டுமா?

அது மட்டுமில்லாமல், கெமி – திவாகர் சண்டை, கெமி – கமருதீன் சண்டை உள்ளிட்டவை ஒரு போலியான தொனியில் இருப்பதாகவும் ரசிகர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இப்படி 9 வது பிக் பாஸ் சீசனின் ஆரம்பமே நிறைய விமர்சனங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், அதிகமாக இதில் அடிபடுவது வாட்டர்மெலான் ஸ்டார் திவாகர் தான். முதல் போட்டியாளராக இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருந்தார் திவாகர். அப்போது விஜய் சேதுபதி திவாகரிடம் வெளியே செய்வது போல உள்ளே இருக்க வேண்டாம் என குறிப்பிட்டு அனுப்பினார்.

ஆனால் வந்த வேகத்திலேயே, ரீல்ஸ் வீடியோக்கள் செய்வது போல நடித்து காட்டியது, நடனம், தான் டாக்டர் என வந்த போட்டியாளர்களிடம் அறிமுகம் செய்வது என செய்து கொண்டே இருந்தார் திவாகர். பார்வையாளர்களுக்கு எரிச்சலை உண்டு பண்ணினாலும் உள்ளே இருந்த போட்டியாளர்கள் இதை ரசித்துக் கொண்டே இருந்தனர்.
kamarudeen in bigg boss

பட்டையை கிளப்பிய அரோரா..

இதனிடையே, திவாகர் குறித்து இயக்குனர் பிரவீன் காந்தி, கமருதீன், அரோரா சின்க்ளேர் உள்ளிட்ட பலரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது பிரவீன் காந்தியும், கமருதீனும் தன்னை அனைவரும் கவனிக்க வேண்டுமென திவாகர் செய்வதாக அவரது நெகட்டிவ் விஷயங்களை கூறிக் கொண்டே இருந்தனர்.
Aurora Sinclair speech

அப்போது கமருதீனிடம் பேசும் அரோரா, “அவர் என்ன செய்திருக்காரோ அதன் மூலம் தான் இங்கே வந்திருக்கிறார். அதை நீ பேசக்கூடாது. இந்த வீட்டிற்குள் என்ன சொல்கிறாரோ அதற்கு மட்டும் அடி. தனிப்பட்ட முறையில் தாக்கக்கூடாது. இங்கே அவர் செய்வதை மட்டும் எதிர்கொண்டு கேள்” என முதிர்ச்சியுடன் பேசியதும் பிரவீன் காந்தி அவரை பாராட்டி கைகுலுக்கி இருந்தார். அத்துடன் பார்வையாளர்கள் மத்தியிலும் அரோராவின் பேச்சு பாராட்டுக்களை பெற்று வருகிறது.