ஒரு மேட்சை ஹைதராபாத் ஜெயிச்சதும்.. எதிர்பாராமல் நடந்த வினோத சம்பவம்.. அட, இத கவனிச்சீங்களா..

By Ajith V

Published:

நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறி அந்த அணியின் ரசிகர்களுக்கு கடும் வேதனையை கொடுத்துள்ளது. லீக் சுற்றில் இன்னும் இரண்டு போட்டிகள் அவருக்கு முடியாமல் இருக்கும் நிலையிலேயே அவர்களது பிளே ஆஃப் வாய்ப்பு முடிவுக்கு வந்துள்ள நிலையில் இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் தோல்வி தான்.

ஹைதராபாத் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் யாரும் இத்தனை சீக்கிரம் அந்த போட்டி முடிந்து லக்னோ அணி தோற்றுவிடும் என நிச்சயம் நிறைந்து இருக்க மாட்டார்கள். 166 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய ஹைதராபாத் அணி வெறும் 58 பந்துகளில் இலக்கை எட்டி முடித்ததுடன் மட்டும் இல்லாமல், ஐபிஎல் வரலாற்றில் பல முக்கிய சாதனைகளையும் அடித்து நொறுக்கி உள்ளனர்.

இந்த சீசனில் தொடக்க வீரர்களாக அதிக ரன்கள் சேர்த்த இணையாக அபிஷேக் ஷர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் இருக்கும் நிலையில் இதுவரைக்கும் இருவரும் இணைந்து 600 ரன்களுக்கு மேல் இந்த சீசனில் அடித்து விட்டனர். இருவரும் இடதுகை பேட்ஸ்மேனாக இருக்கும் நிலையில் ஒரே போன்று ஆடி ரன் சேர்ப்பதால் அவர்களுக்கு இடையே அதிக ரன் சேர்ப்பது யார் என்ற போட்டியும் ஆரோக்கியமாக இருந்து வருகிறது.

இந்த ஐபிஎல் சீசனில் பெரிதும் பேசப்பட்டு வரும் அணியாக இருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இருக்கையில் ஏற்கனவே 287 ரன்களையும், 277 ரன்களையும் ஒரே சீசனில் அடித்து ஐபிஎல் தொடரில் அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனையும் தங்கள் வசம் மாற்றி இருந்தது.

அப்படி இருக்கையில் தான் தற்போது ஒரே ஒரு போட்டியில் வெற்றி பெற்றதன் காரணமாக புள்ளி பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளதுடன் மட்டுமில்லாமல் அவர்களின் நெட் ரன் ரேட்டில் நடந்த வித்தியாசம் பற்றி தான் தற்போது பார்க்கப் போகிறோம்.

இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பாக அவர்களது ரன் ரேட் -0.065 ஆக இருந்தது. ஆனால் தற்போது இந்த வெற்றியின் காரணமாக, அப்படியே இரண்டு மடங்காக +0.406 என உயர்ந்ததன் காரணமாக தான் புள்ளி பட்டியலிலும் 3 வது இடத்திற்கு அவர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். ஒரே போட்டியில் இப்படி பன்மடங்கு ரன் ரேட் உயர்ந்தது மிக அரிதான நிகழ்வாக ஐபிஎல் தொடரில் பார்க்கப்படும் நிலையில் அதனை மிக அசால்டாக செய்துள்ளது ஹைதராபாத் அணி.