விஜய் தொலைக்காட்சி முதல் 2 சீசனைப் போலவே 3 ஆவது பிக் பாஸ் சீசனும் பிரபலமானது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் ரேஷ்மா.
வேலைன்னா வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் வரும் புஷ்பா புருஷன் காமெடி மூலம் மிகவும் பிரபலமாகினார்.
அதைத்தவிர சன் சிங்கர் தொகுப்பாளராகப் பணியாற்றிய இவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க வாணி ராணி, மரகத வீணை, உரிமை, என் இனிய தோழியே, சுந்தர காண்டம், ஆண்டாள் அழகர், வம்சம் போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.
அந்த வகையில் நடிகை ரேஷ்மா தற்போது பேயம்மா, போடா முண்டம், மை பெர்பெக்ட் ஹஸ்பண்டு போன்ற படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
தற்போது கொரோனாவால் படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத நிலையில். அவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்தவகையில் ரசிகர்களுடன் லைவ் சேட்டில் கலந்துரையாடிய அவரிடம் ரசிகர் மூன்றாம் திருமணத்தை குறித்து கேட்க, அவர் இல்லை என்று பதில் கூறியுள்ளார்.
உள்ளதை எப்போதும் மூடி மறைக்காமல் சொல்லும் அவர் இல்லை என்று பொய்யாக சொல்லி இருக்க மாட்டார், இதனால் மூன்றாம் திருமணம் என்பது வதந்தியே ஆகும் என்று கூறப்படுகின்றது.