மணக்கோலத்தில் பிக் பாஸ் மீரா மிதுன்.. வைரலாகும் வீடியோ!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர், அதில் ஒருவர் மீரா மிதுன். உள்ளே அனைத்துப் போட்டியாளர்களுடன் சண்டையிட்டு சர்ச்சையின் நாயகியாக வலம் வந்த இவர், உள்ளே இருந்தால்தான் பிரச்சினை என்றால், வெளியே…

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர், அதில் ஒருவர் மீரா மிதுன். உள்ளே அனைத்துப் போட்டியாளர்களுடன் சண்டையிட்டு சர்ச்சையின் நாயகியாக வலம் வந்த இவர், உள்ளே இருந்தால்தான் பிரச்சினை என்றால், வெளியே போன பின்னாலும் இவர் குறித்த பிரச்சினை ஓய்ந்தபாடிலை. வெளியேறிய பின்னர் ஒவ்வொரு போட்டியாளர்கள் குறித்து சர்ச்சைகளை கிளப்பிய வண்ணமே இருந்தார்.

அதன்பின்னர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து வெளியான நம்ம வீட்டுப்பிள்ளை படம் குறித்து பிரச்சினையைக் கிளப்பினார்.

3fa98d1a57400b99a7b390d5d5455c7d-1

அதாவது இந்தப் படத்தில் மிரா 10 நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்துக் கொடுத்துள்ளார். ஆனால் அவர் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டது அவருக்கு அதிர்ச்சியாக இருந்ததாக ட்விட்டர் பதிவில் கூறி இருந்தார்.

அதன்பின்னர் கோலிவுட்டில் தான் நடிக்க வேண்டிய படத்தில் அக்ஷரா ஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்றும், இயக்குனர் நவீனுடனான பிரச்சினை என சொல்லிக் கொண்டே போகலாம், அதன்பின்னர் கோலிவுட்டிற்கு பை சொல்லிவிட்டு பாலிவுட் போன இவர் தற்போது திருமண கோலத்தில் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் அந்த வீடியோவில், “இந்த மணக்கோலம் ரியல்,  விரைவில் எனக்கு திருமணம்” என்றும் கூறியுள்ளார். இந்த வீடியோவை வலைதளத்தில் பதிவிட்டதுடன், “இது உண்மை, யாரும் இதை காப்பி அடிக்க வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன