நடிகர் அஜித் நேற்று தனது 49 வது பிறந்தநாளைக் கொண்டாடினார். கொரோனாவால் உலகம் இன்னல்களை சந்தித்துவரும் இந்தநிலையில், தனது பிறந்தநாளை தான் கொண்டாடப்போவதில்லை என்றும், அதேபோல் ரசிகர்களும் தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் என்று அஜித் அலுவலகத்தில் இருந்து வேண்டுகோள் வைக்கப்பட்டது.
ஆனால் அஜித் ரசிகர்களோ, நாங்கள் கொண்டாடியே தீருவோம் என்று வெறித்தனமாக பிறந்தநாளைக் கொண்டாடினர். ரசிகர்கள் மட்டுமின்றி, சினிமா நடிகர்கள், நடிகைகள் எனப் பலரும் அஜித்துக்கு வாழ்த்துகளைக் கூறினர்.
அந்த வகையில் தொகுப்பாளினி பாவனா சர்வைவா பாடலுக்கு பரதநாட்டியம் ஆடி அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறியுள்ளார். அதாவது விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் ஜூனியர், ஏர்டெல் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன், விஜய் விருதுகள் விழா போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய விஜே பாவனா, தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பிசியாக உள்ளார்.
நேற்று பாவனா அஜித்தின் விவேகம் படத்தில் இடம் பெற்ற சர்வைவா பாடலுக்கு பரதநாட்டியம் ஆடி தமிழ் சினிமாவின் ஜென்டில்மேன் அஜித் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று வாழ்த்துக் கூறியுள்ளார். இந்த வீடியோவானது தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.