ரம்ஜான் பண்டிகை புகைப்படங்களை வெளியிட்ட பாவனா… வைரலாக்கிய ரசிகர்கள்!!

நடிகை பாவனா  தமிழ், மலையாளம், கன்னடம் என தென்னிந்தியப் படங்களில் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வந்தார். 2002 ஆம் ஆண்டு மலையாளத்தில் நம்மல் என்னும் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கால் பதித்த இவர்…

நடிகை பாவனா  தமிழ், மலையாளம், கன்னடம் என தென்னிந்தியப் படங்களில் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வந்தார். 2002 ஆம் ஆண்டு மலையாளத்தில் நம்மல் என்னும் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கால் பதித்த இவர் 3 ஆண்டுகளுக்குள் 18 படங்களில் நடித்துவிட்டார்.

அதன்பின்னர் 2005 ஆம் ஆண்டு சித்திரம் பேசுதடி படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தார். அதன்பின்னர் கிழக்கு கடற்கரை சாலையிலே, வெயில், தீபாவளி, கூடல் நகர் போன்ற படங்களில் நடித்ததன்மூலம் புகழ் பெற்றார்.

இவர் நடிப்பில் கன்னட மொழியில் வெளியான 99 சிறப்பான வரவேற்பினைப் பெற்றது. 2018 ஆம் ஆண்டு நவீன் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட இவர், திருமணத்திற்குப் பின்னரும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

2f8bccd2c36200eb401c088ac2d2452e

தற்போது இவர் இன்ஸ்பெக்டர் விக்ரம், பஜராங்கி 2, கோவிந்தா கோவிந்தா போன்ற படங்களில் நடித்து வருகிறார். நேற்று முன் தினம் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய சகோதரர்கள் தங்களது ரம்ஜான் பண்டிகையைக் கோலாகலமாகக் கொண்டாடினர்.

அந்தவகையில் ரம்ஜான் பண்டிகையன்று தான் எடுத்துள்ள புகைப்படங்களை இன்ஸ்டாவில் பாவனா பதிவிட்டுள்ளார். அழகே உருவாக இருக்கும் பாவனாவின் போட்டோவினை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன