16 வயதினிலே படத்திற்காக கமல் கேட்ட சம்பளத்தால் அதிர்ந்த பாரதிராஜா.. ஆனா ரஜினிக்கு எவ்ளோ கொடுத்தாங்க தெரியுமா?

By John A

Published:

தமிழ் சினிமா வரலாற்றை பாரதிராஜா வருகைக்கு முன்.. பாரதிராஜா வருகைக்குப் பின் என இரண்டாகப் பிரிக்கலாம். ஸ்டுடியோவிற்குள் முடங்கிக் கிடந்த தமிழ்சினிமாவினை கிராமத்துப் பக்கம் கேமாராவினை எடுத்து வந்து வயல்வெளி, பெட்டிக்கடை, மாட்டுக் கொட்டகை, கிராமத்து மண் வாசம் என முதன்முதலாக கிராமத்து அழகியலை கேமராவில் காட்டியவர்.

தனது முதல் படமான 16 வயதினிலே படத்தினை எடுத்து இந்த சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர் பின் பல கிராமத்துப் படங்களை எடுத்து இந்திய சினிமாவின்  இயக்குநர் இமயமானார். ரஜினி, கமலை பாலச்சந்தர் அறிமுகப்படுத்தினாலும் அவர்களுக்குள் இருக்கும் நடிப்புத் திறமையை வெளிக் கொண்டு வந்ததில் ‘16 வயதினிலே‘ படத்திற்கு முக்கியப் பங்கு உண்டு.

16 வயதினிலே படத்தில் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்தான் தான் சினிமா பி.ஆர்.ஓ-வான சித்ரா லட்சுமணன். பாரதிராஜா 16 வயதினிலே சப்பாணி கேரக்டரில் கமல்ஹாசன் நடித்தால் நன்றாக இருக்கும் என எண்ணியிருக்கிறார். தனது விருப்பத்தினை உதவி இயக்குநர்களிடம் சொல்ல சித்ரா லட்சுமணன் அப்போது கே.ஆர்.ஜி தயாரித்த ‘ஆயிரத்தில் ஒருத்தி‘ என்ற படத்திற்காக கமலை 17 ஆயிரம் சம்பளத்தில் புக் செய்து கொடுத்திருக்கிறார்.

இதனால் அதே சம்பளத்தில் மீண்டும் 16 வயதினிலே படத்திற்காக புக் செய்யலாம் என்று  சித்ரா லட்சுமணன் கமலிடம் பாரதிராஜாவை அழைத்துச் சென்றிருக்கிறார். அவர்கள் பேசப் போனது சம்பள விஷயமாக. அப்போது அவர் நடித்துக் கொண்டிருந்தது ‘பணத்துக்காக‘ என்ற படம். பணத்துக்காக படத்தில் நடித்துக் கொண்டிருந்தவரிடம் பணம் பற்றியே பேசப் போனவர்களுக்கு அதிர்ச்சி அவர்கள் எதிர்பார்த்ததற்கு மேலாக கமல் 30 ஆயிரம் சம்பளம் கேட்டிருக்கிறார்.

எம்.ஜி.ஆருக்குக் கம்பேக் கொடுத்த பட்டுக்கோட்டையார் பாடல்கள்.. வெற்றிக்காக போராடியவருக்கு அடுத்தடுத்து வந்த வாய்ப்பு

உடனே யோசித்த பாரதிராஜா இந்தப் படத்துக்கான மொத்த பட்ஜெட்டே நான்கே முக்கால் லட்சம் தான். என்ன செய்வது என்று கையைப் பிசைய அப்போது சித்ரா லட்சுமணன் சிவக்குமார் பெயரை சொல்ல பாரதிராஜா மறுத்து இந்தப் படத்துக்கு கமல்தான் பொறுத்தமாக இருப்பார் என்று கூறி ஒகே சொல்லி விட்டு வந்துவிட்டார்.

ஆனால் அந்தப் படத்தில் நடித்த மற்றொரு உச்ச நட்சத்திரமான ரஜினிக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் 2 ஆயிரம் மட்டுமே. இதனால் படத்தின் தயாரிப்பு செலவைக் குறைக்க நினைத்த பாரதிராஜா ஈஸ்ட் மென் கலருக்குப் பதிலாக ஆர்.ஓ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எடுத்தார். இதற்கு செலவு குறைவாகவே வரும். இவ்வாறு கஷ்டப்பட்டு பார்த்துப் பார்த்து செலவு செய்து எடுத்த படம் தான்பின்னாளில் தமிழ் சினிமாவின் வரலாற்றையே மாற்றிப் போட்டது.