ஆபரேஷன் வேணாம்னு மறுத்த மனோஜ்… பாரதிராஜாவின் அண்ணன் தகவல்!

பாரதிராஜாவின் மகன் மனோஜ் சமீபத்தில் இறந்தது திரை உலகையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவருக்கு உண்மையில் என்னதான் ஆச்சுன்னு பாரதிராஜாவின் சகோதரர் ஜெயராஜ் என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா… அன்னைக்கு மதியம் கூட அப்பாக்கிட்ட நல்லா பேசிக்கிட்டு இருந்தான்.…

jayaraj, manoj

பாரதிராஜாவின் மகன் மனோஜ் சமீபத்தில் இறந்தது திரை உலகையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவருக்கு உண்மையில் என்னதான் ஆச்சுன்னு பாரதிராஜாவின் சகோதரர் ஜெயராஜ் என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா…

அன்னைக்கு மதியம் கூட அப்பாக்கிட்ட நல்லா பேசிக்கிட்டு இருந்தான். தேனிக்குப் போகணும்னு அப்பா சொன்னப்ப அப்படியாப்பா நானும் கூட வர்ரேன். ரெஸ்ட் எடுக்கணும்னு மனோஜ் சொன்னான் என்கிறார் ஜெயராஜ். அதே நேரம் அன்னைக்கு சாயங்காலம் பப்பாளி சாப்பிட்டாராம்.

அப்போ டீ போட்டுக்கிட்டுத் தான் இருந்தாங்களாம். அதுக்குள்ள என்னமோ வலிக்கிற மாதிரி இருக்குன்னு நெஞ்சைப் பிடிச்சான். அப்படின்னு அழுதுவிடுகிறார் ஜெயராஜ். கடைசியாக 20 நாள்களுக்கு முன்னாடி பைபாஸ் ஆபரேஷன் இருதயத்தில் பண்ணியதாகவும் முதலில் வேணாம்னு சொன்னதாகவும் நாங்க தான் பண்ண சொன்னோம்.

குழந்தைகள்லாம் இருக்குன்னு சொன்னதுக்கு அப்புறம் பண்ணியதாகவும் சொல்கிறார் ஜெயராஜ். எல்லாமே ஓகேன்னு டாக்டர் சொல்லிட்டாங்க. அதுக்கு அப்புறம் இப்படி ஆகும்னு நினைச்சிக்கூட பார்க்கல என அழுகிறார் ஜெயராஜ். மனோஜைப் பொருத்தவரை எல்லாருடனும் நல்லா ஜோவியலாகப் பழகுவான். எதையோ நாங்க கஷ்டப்படக்கூடாதுன்னு எங்கக்கிட்ட சொல்லாம மறைச்சிட்டானோன்னு தோணுது என்கிறார் ஜெயராஜ்.

பாரதிராஜா இப்போ எப்படி இருக்காருன்னு கேட்டபோது நேத்துக் கூட பையன் போட்டோவையே பார்த்துக்கிட்டு இருந்தாரு. என் புள்ளை என்னை விட்டுப் போக மாட்டான். அவன் முகத்தைப் பார்க்கணும்னு சொல்லிக்கிட்டே இருந்தாரு. அவரு இன்னும் பையன் இறந்ததை நம்பல. ரொம்ப உழன்றுக்கிட்டே இருக்காரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.