ஜோதிகா ரீ எண்ட்ரியில் நடித்த அனைத்துப் படங்களுமே மாஸ் ஹிட் தான். மிகவும் செலக்டிவான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்தவகையில் தற்போது 2டி எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் ஜெ.ஜெ.பெட்ரிக் இயக்கத்தில் பொன்மகள் வந்தாள் படத்தில் நடித்துள்ளார்.
ஹீரோயினை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தினை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது, மேலும் இப்படத்தினை இயக்குனர் ஜெ.ஜெ.பெட்ரிக் இயக்கி உள்ளார்.
இப்படத்தில் பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன், தியாகராஜன் போன்ற 5 மாபெரும் இயக்குனர்களும் நடித்துள்ளனர். பலரது எதிர்ப்பினையும் மீறி நாளை (மே 29 ஆம் தேதி) அமேசான் ப்ரைமில் பொன் மகள் வந்தாள் திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் புதிய பாடல் ஒன்றின் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் இந்தப் பாடல் நல்ல வரவேற்பினைப் பெற்று வருகிறது.
இந்தப் படத்தின் சிறப்புக்காட்சியை பார்த்துள்ள இயக்குனர் பாரதிராஜா பொன்மகள் வந்தாள் படம் தன்னைக் கலங்கடித்ததாகக் கூறியுள்ளார், மேலும் அது சமூகத்தில் உள்ள அனைவரையும் நிச்சயம் கலங்கடிக்கும் என்று பதிவிட்டுள்ளார். இதோ பாருங்கள்