பிக் பாஸ் 3 நிகழ்ச்சி நாளையுடன் முடிவடைய உள்ளது, பார்வையாளர்கள் அனைவரும் நாளை யார் ஜெயிப்பார்கள் என்பதை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டுள்ளனர். 100 நாட்களைக் கடந்ததும்போதும், ஒவ்வொரு நாளும் யாராவது வந்துசென்ற வண்ணமே உள்ளனர்.
அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்ததைப்போல், என் ப்ரண்டைப் போல் யாரு மச்சா? என்ற பாடலோடு பிக் பாஸ் வீட்டிற்குள் காலடி எடுத்துவைத்தனர் கவின் மற்றும் தர்ஷன் ஆகியோர்.
சாண்டி கவினை தூக்கிக்கொண்டு சுற்றிவந்தாலும், அவருடைய கவனம் முழுதும் லாஸ்லியா மீதே இருந்தது. லாஸ்லியா கவினை வச்ச கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்.
அடுத்து போட்டியாளர்கள் அனைவருக்கும் பழைய நினைவுகளை நினைவுகூறும் வகையில், இதுவரை நடந்த நிகழ்ச்சியில் அனைவரும் அழுத ஒவ்வொரு தருணங்களாக போட்டுக் காண்பித்தார் பிக் பாஸ்.
அனைவரும் ஒருபுறம் அழுதுகொண்டு இருக்க, கவினும் லாஸ்லியாவும் ஒருபுறம் ரொமான்ஸ் செய்துகொண்டு இருந்தனர். கெடச்ச கேப்பில கவினும் கிடா வெட்டிட்டார் என பலரும் விமர்சித்து வருகின்றனர்.