விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் லாஸ்லியா. இலங்கைத் தமிழ்ப் பெண்ணான இவரைத் தமிழ் ரசிகர்கள் யாரும் துவக்கத்தில் அறிந்திருக்கவில்லை.
ஆனால் பிக் பாஸ் 1 ஏற்கனவே பார்த்திருப்பாரோ என்னவோ, ஓவியாவினைப் போலவே கேமரா முன்னால் பேசுவது, டான்ஸ் ஆடுவது என இருந்து ரசிகர்கள் மத்தியில் வெகு விரைவில் ஆர்மி உருவாக்கும் அளவு பேமசாகிவிட்டார்.
அதன்பின்னர் கவினின் காதல் வலையில் விழுந்த அவர், நிகழ்ச்சி முடியும் வரை அந்த வலையில் இருந்து எழவே இல்லை. பிக்பாஸில் 3 வது போட்டியாளராக வெற்றி பெற்ற இவர், வெளியே வந்த பின்னர் கவின் காதல் குறித்து வாயைத் திறக்கவில்லை.
ஒரு வழியாக லாஸ்லியா தமிழ் சினிமாவில் பிரண்ட்ஷிப் என்ற படத்திலும், ஆரி நடிக்கும் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பிக் பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் துவக்கத்தில் எந்த போஸ்ட்டுகளும் போடாத நிலையில், தற்போது ஹீரோயின் ஆனதும், பல கருத்துகளைப் போட்டு வருகிறார்.
அந்தவகையில் தற்போது இன்ஸ்டாகிராமில், சோபாவில் அமர்ந்திருக்கும் போட்டோவை பதிவிட்டு, ”நரகத்தில் கூட ராணியாக இருங்கள்” என்று கேப்ஷனாகப் பதிவிட்டுள்ளார்.