19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் பெறும் என்று எதிர்பார்த்த நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வியடைந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 42.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 177 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஜெய்ஸ்வால் 88 ரன்களும்,திலக் வர்மா இலக்கை 38 ரன்களும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இதன் பின்னர் 178 என்ற இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணி மழை காரணமாக 170 என்ற இலக்கை நோக்கி விளையாடியது. 42.1 ஓவரிலேயே இலக்கை எட்டிய வங்கதேச அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதனையடுத்து அந்த அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது