பாலசரவணன் சானிடைசர் பேச்சு- ஆதரவும் எதிர்ப்பும்

நடிகர் பாலசரவணன் இவர் வளர்ந்து வரும் காமெடி நடிகர் ஆவார்.மதுரை சோழவந்தானை சேர்ந்த இவர் குட்டிப்புலி, டார்லிங் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றார். தற்போது பல படங்களில் நடித்து வரும் பாலசரவணன் சமீபத்திய…

நடிகர் பாலசரவணன் இவர் வளர்ந்து வரும் காமெடி நடிகர் ஆவார்.மதுரை சோழவந்தானை சேர்ந்த இவர் குட்டிப்புலி, டார்லிங் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றார்.

24fb4cdc059d6f09eac0981365b25e2b

தற்போது பல படங்களில் நடித்து வரும் பாலசரவணன் சமீபத்திய கொரோனாவால் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சாதாரண சானிடைசர் விலையை 50 ரூபாய் பெறுமானமுள்ள சானிடைசரை 100 ரூபாய்க்கும் அதற்கு மேலும் விற்பதாக எந்த மாதிரி நேரத்தில் கொள்ளையடிக்கிறதுன்னு விவஸ்தை இல்லையா கொரோனாவை விட கொடியவன் மனிதன் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.

பாலசரவணனின் இந்த பேச்சுக்கு பலர் ஆதரவு அளித்து வருகின்றனர். துணிச்சலாக பேசிய பாலசரவணனின் இந்த பேச்சுக்கு பலரும் ஆதரவளித்து வரும் இந்த வேளையில் சிலர் இதற்கு எதிர்ப்பும் தெரிவித்து உள்ளனர்.

சானிடைசர் மற்றும் மாஸ்க் கடும் தட்டுப்பாடு உள்ளது குறிப்பிட்ட காலத்தில் உற்பத்தி அதிகம் உற்பத்தி செய்ய முடியாத சூழலில் இதன் விலை அதிகமாகத்தான் விற்க முடியும். நீங்கள் உங்கள் சினிமாத்துறையில் பண்டிகை நாட்களில் டிக்கெட் விலையை அதிகமாக ஏற்றி விற்கும்போதும் நடிகர்கள் சம்பளம் இஷ்டத்துக்கு வாங்குவதை எல்லாம் கேட்க மாட்டீர்கள் என பாலசரவணனை வறுத்தெடுத்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன