ஜெகதீசன் சுபு இயக்கத்தில் சில நாட்களுக்கு முன் வந்த படம் பக்ரீத். மிக சிறந்த படைப்பான இப்படம் வருவதற்கே பல தடைகளை தாண்டி காலதாமதமாகத்தான் வந்தது.
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்த அடிப்படையில் படம் வந்து பெரிய வெற்றியை அடையாவிட்டாலும் . பெரிய வரவேற்பை பெற்றது.
ஒரு வாயில்லா ஜீவனின் வாழ்க்கை முறையை சிறப்பாக சொன்னவிதத்தில் இப்படம் கவனம் ஈர்த்தது. ஒட்டகம் மற்றும் விக்ராந்தின் நடிப்பு பேசப்பட்டது.
இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் ஜெகதீசன் சுபு அடுத்த படத்தை இயக்குகிறார். அதற்கான வேலைகள் நடப்பதாக தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.