ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஏலியன் திரைப்படமான அயலான் படத்தின் அடுத்த பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட அயலான் திரைப்படம் பல்வேறு காரணங்களுக்காக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என கடைசியாக அறிவிக்கப்பட்டது. கடைசி நேரத்தில் மீண்டும் பொங்கல் வெளியீடு என அடுத்த ஆண்டுக்கு போஸ்ட்போன் ஆனது.
அயலான் படத்தின் அடுத்த பாடல் ரிலீஸ்:
கடந்த வாரம் கேஜேஆர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ஆலம்பனா திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு கடைசி நேரத்தில் ரிலீஸ் ஆகவில்லை. பொங்கல் பண்டிகைக்கு அயலான் திரைப்படம் வெளியாகும் என தற்போது ரிலீசாகி உள்ள பாடல் லிரிக் வீடியோவில் கூட அறிவித்துள்ளனர். உன்னால் எதிர்பார்த்த தேதியில் படம் வெளியாவது சந்தேகம் தான் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இசையில் அயலான் படத்தின் பாடல்கள் உருவாகி உள்ளன. வேற லெவல் சகோ எனும் பாடல் சில ஆண்டுகளுக்கு முன்னதாக வெளியாகி பழைய பாடலாகவே மாறிவிட்டது. இந்நிலையில் அயலா அயலான் எனும் புதிய பாடல் தற்போது வெளியாகியுள்ளது. ஆனால், இந்தப் பாடலை கேட்கும் போதும் இதுவும் பல வருடங்களுக்கு முன்பே ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருப்பார் என்றே தோன்றுகிறது.
ஏ.ஆர். ரகுமான் இசை சொதப்புதே?
இந்த பாடலின் லிரிக் வீடியோவில் வரும் ஏலியன் காட்சிகளை மட்டுமே ரசிக்கும் படியாக உள்ளதே தவிர விவேக் வரிகளில் இடம்பெற்ற எந்தவொரு வரியும் ரசிக்கும்படியாக இல்லை. கடைசியாக தமிழ் மொழியின் சிறப்பையும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் வசனத்தையும் புகுத்தி பாடலைத் தேற்ற ஏ ஆர் ரகுமான் முயற்சித்திருக்கிறார் என்றே தெரிகிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே ரகுமான் பாடல்கள் ஏற்கனவே கேட்ட பாடல்களைப் போலவே வருவது ரசிகர்களை ஏமாற்றி வருகிறது. ராக் ஸ்டார் அனிருத் அதிரடியாக பல பெரிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் 2, பொங்கலுக்கு வெளியாக உள்ள லால் சலாம், அயலான் என அடுத்தடுத்து ஏ.ஆர். ரகுமான் பாடல்கள் வெளியானாலும் ஈர்க்கும்படி இல்லை என்பதே ரசிகர்களை வேதனையில் ஆழ்த்துகிறது.
சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் குழந்தைகளை ஒரு பொங்கலுக்கு கவரும் என தெரிகிறது. லால் சலாம் மற்றும் கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்கள் திரைக்கதை ரீதியாக எப்படி இருக்கிறதோ அதைப் பொறுத்து தான் அந்த படங்களின் வெற்றி உறுதியாகும். அயலான் படம் பெரியோர்களையும் கவர்ந்தால் மட்டுமே நல்ல வசூலை ஈட்டும் என தெரிகிறது.