இந்த ஆண்டு பொங்கலுக்கு தமிழ் சினிமாவில் வெளியான சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் தனுஷின் கேப்டன் மில்லர் இரண்டு படங்களும் வசூல் ரீதியாக பெரும் தோல்வியை சந்தித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் வெளியாகி இருக்கிறது.
அயலான் திரைப்படம் ஏழு ஆண்டுகளாக உருவாகி வந்த நிலையில் அந்த படத்திற்கு வாங்கிய கடனுக்கான வட்டி மட்டுமே பல கோடி ரூபாய் என்று ஆனால் வசூல் போதிய அளவில் வராத நிலையில் ஆடியோ லான்ச் உடன் தயாரிப்பாளர் இதற்கு மேல் தன்னால் செலவு செய்ய முடியாது என வெற்றி விழாவை நடத்தாமல் ரத்து செய்துவிட்டார்.
அயலான் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்:
இன்னமும் அயலான் திரைப்படம் தெலுங்கில் ஆக முடியாமல் சிக்கித் தவித்து வருகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அந்தப் படத்தை ரிலீஸ் செய்யாமலே வைத்துவிட்டதாக கூறுகின்றனர்.
அயலான் திரைப்படம் 90 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானதாகவும் அதன் வட்டி மட்டுமே 70 கோடி ரூபாய்க்கும் மேல் உள்ளதாகவும் இந்த படத்தின் வசூல் ஒட்டுமொத்தமாக 88 கோடி ரூபாய் மட்டுமே உலக அளவில் பெற்றதாகவும் அதனால் தயாரிப்பு தரப்புக்கு மற்றும் பழத்தை பெருமளவில் நம்பி தனது சம்பளத்தை கூட வேண்டாம் எனக் கூறிய சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக கூறுகின்றனர்.
கேப்டன் மில்லர் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்:
அப்படியே சத்யஜோதி தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், சிவராஜ் குமார், பிரியங்கா மோகன் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் விமர்சன ரீதியாக முதல் நாளே மொக்கை வாங்கிய நிலையில், பொங்கலுக்கு அந்தப் படத்தை பார்க்க பல ஊர்களில் மக்கள் விரும்பவில்லை என்கிற அதிர்ச்சி தகவல் வெளியானது.
அயலான் திரைப்படம் ஆவது அதிகாரபூர்வமாக 75 கோடி வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. ஆனால், கேப்டன் மில்லர் படம் வசூல் குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடாத நிலையில், 95 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் அதிகபட்சமாக 10 கோடி ரூபாய் அளவுக்கு தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி இருப்பதாக வலைப்பேச்சு பிஸ்மி தனது புதிய பாக்ஸ் ஆபீஸ் வீடியோவில் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான இரண்டு படங்களும் பெரும் நஷ்டத்தை சந்தித்து இருப்பதாகவும் கூறியுள்ளார். சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷுக்கு ஆரம்பமே பயங்கர அடி விழுந்திருப்பதால் அடுத்த படம் வெளியாகும் போது பெரிய சிக்கல் ஏற்படும் என்கின்றனர்.