பிக் பாஸ் 9 வது சீசனில் ஏராளமான பிரச்சனைகள் போய் கொண்டிருக்க, யாராலும் தீர்த்து வைக்க முடியாத பிரச்சனையாக பார்க்கப்படுவது தான் கம்ருதீன் – பார்வதி – அரோரா விவகாரம். பார்வதி ஒரு ஏக்கத்தோடு கம்ருதீனை பார்க்க, அரோரா நட்பாக அவரை பார்க்கிறார். ஆனால் கம்ருதீன் பார்வதியுடன் இருப்பது அரோராவுக்கு பிடிக்கவில்லை என்றும், அரோராவுடன் இருப்பது பார்வதிக்கு பிடிக்கவில்லை என்பது போன்றும் ஒரு முக்கோண பிம்பம் உள்ளது.
பார்வதி மற்றும் அரோராவுக்கு இடையே எந்த பிரச்சனை இல்லை என்ற போதிலும், கம்ருதீன் பெயரால் அவர்கள் இரண்டு பேரும் விலகியே இருப்பது பரபரப்பை உண்டு பண்ணி தான் வருகிறது. இதற்கு மத்தியில் தான், விஜய் சேதுபதி முன் பேசியிருந்த அரோரா, பார்வதியுடன் உறவை நீட்டிக்க விரும்பமாட்டேன் என கூறியிருந்தார்.
ஒரு முடிவு வரட்டும்..
அப்படி இருக்கையில், வைல்டு கார்டு என்ட்ரியில் வந்த ஆதிரை, கம்ருதீன் விவகாரம் பற்றி பார்வதி – அரோரா பேசி ஒரு முடிவுக்கு வரவேண்டும் என அறிவுறுத்துகிறார். அதன்படி பார்வதி மற்றும் அரோரா ஆகியோர் மனம் விட்டு பேசவும் செய்கின்றனர்.
“நான் இத்தனை நாள்ல ஒரு தடவை கூட பார்வதிய நாமினேட் பண்ணுங்கன்னு மத்தவங்ககிட்ட சொன்னதில்ல. ஆனா நீங்க எல்லார்கிட்டயும் போய் அரோராவ நாமினேட் பண்ணுங்கன்னு சொன்னீங்க. அது நீங்க கம்ருதீன்கிட்ட இருந்து நான் விலகி இருக்கணும்னு என் பெயரை சொன்ன மாதிரி இருந்துச்சு” என அரோரா சொல்ல, அந்த எண்ணத்தில் நான் உன் பெயரை நாமினேட் செய்யும்படி அனைவரிடமும் கூறவில்லை என்றும் பார்வதி விளக்கம் கொடுக்கிறார்.
எனக்கு லவ்வே இல்ல..
இதே போல, பார்வதி தனக்கு வெளியே ஆள் இருப்பதாக கூறிவிட்டு கம்ருதீன் மீதும் ஃபீலிங் வந்ததையும் மறுக்காமல் இருந்தது பற்றியும் அரோரா கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் சொல்லும் பார்வதி, “கம்ருதீன் மேல எனக்கு இருக்குற ஃபீலிங்ஸ் உண்மை தான். வெளிய ஆள் இருக்குன்னு ஒரு பொண்ணு சொல்றது Defend பண்றதுக்காக தான். என் வீட்டுல இருக்குறவங்களுக்கு மட்டும் தான் நான் பதில் சொல்லணும். மத்தபடி இங்க என்ன பேசுவாங்க, வெளிய என்ன பேசுவாங்கன்னு கவலைப்பட போறதில்ல” என்றும் பார்வதி சொல்கிறார்.
இதன் பின்னர் பேசும் அரோரா, “எனக்கு பார்வதியும் வேணாம், நீயும் வேணாம்னு கம்ருதீன்கிட்டயே சொல்லிட்டேன். நீங்க வெளிய போய் கல்யாணம் பண்ணா கூட கூப்பிடுங்க. எனக்கு கவலையே இல்ல. பார்வதி பேச ஆர்மபிச்சா அவ கூடயே இருப்பான். அவ பேசாம சண்டை போட்டா என்கிட்ட ஒட்டிட்டு இருப்பான். இத பாத்துட்டு அவன்கிட்டயே சொல்லிட்டேன். நீ என்ன Use பண்ணிட்டு இருக்கேன்னு. ஆனா பார்வதிய வெறுப்பேத்தனும்னு நான் ஒரு நாள் கூட கம்ருதீனை ஒட்டிட்டு இருந்ததில்ல.
நான் முதல் நாள்ல இருந்து இப்ப வரை கம்ருதீன்கிட்ட ஒரே மாதிரி தான் இருக்கேன். பார்வதி வந்தப்புறமும் அப்படி தான். என்னை கொஞ்சுவான். என்கூட விளையாடுவான். எனக்கு அவன்கிட்ட Romantic Interest ஏ இல்ல. அவனை பாத்தாலே சிரிப்பு தான் வரும். ஜாலியா தான் இருப்போம்” என்றார்.
குடும்பத்துல ஒருத்தர் மாதிரி..
இதற்கடுத்து பேசும் பார்வதி, “நீ என் பீலிங்ஸுக்கும் மதிப்பு குடுத்து கம்ருதீனுக்கு ஏன் என்னை பத்தி நீ புரிய வைக்க முயற்சி பண்ணல?. அவன் குழப்பமா இருந்த நேரத்துல நீ ஏன் அவனை கொஞ்சம் Guide பண்ணல?. பார்வதிக்காகவும் நீ இருக்கணும்னு சொல்லி இருக்கலாம்” என தனது வாதத்தையும் முன் வைக்கிறார்.

இறுதியில் பார்வதி மற்றும் அரோரா ஆகிய இருவரும் சேர்ந்து கம்ருதீனை ஒன்றாக உட்கார வைத்து இதற்கு ஒரு தீர்வை உண்டு பண்ணுவோம் என்றும் முடிவு செய்கின்றனர். இதன் பின்னர், கம்ருதீன் முன்னிலையில் பேசும் அரோரா, அவர் மீது காதல் எதுவுமில்லை என்றும் குடும்பத்தில் அப்படி ஒரு ஆண் தனக்கு இல்லை என எமோஷனலாக பேச கம்ருதீனோ அவருக்கு அருகே போக நினைக்கிறார்.. ஆனால், அரோரா கையெடுத்து கும்பிட கம்ருதீனும் அங்கிருந்து கிளம்பி விட்டார்.
பார்வதியும் கம்ருதீனை மீண்டும் அழைத்து பார்க்க, அவர் வராமல் போக அரோராவும் இதை நினைத்து அழுது கொண்டே இருப்பதாக தெரிகிறது.
நான் கடந்த 7 ஆண்டுகளாக பல வலைத்தளங்களில் கிரிக்கெட், சினிமா தொடர்பான செய்திகளை சுவாரஸ்யம் குறையாமல் வாசகர்கள் விரும்பும் வகையில் எழுதி வருகிறேன். இணையத்தில் இன்று ஏராளமான செய்திகள் சரியான விவரங்கள் இல்லாமல் வெளியாகி வரும் சூழலில் முடிந்த அளவுக்கு சிறந்த செய்திகளை கொடுப்பதற்கு நான் முன்னுரிமை கொடுத்து எழுதி வருகிறேன்.

