Bigg Boss Tamil 9 : ‘செம ஷாக் எனக்கு’.. அப்படி மட்டும் பேசி பாருங்க.. பிரஜினுக்கு அரோரா விட்ட சவால்.. துணிச்சல் தான்யா!

Aurora About Prajean : பிக் பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு போட்டியாளர்களாக பிரஜின், சாண்ட்ரா, திவ்யா மற்றும் அமித் ஆகியோர் நுழைந்த போது மிகப்பெரிய ஒரு மாற்றம் நிகழும் என்று தான் பார்வையாளர்களைப்…

Aurora about Prajean

Aurora About Prajean : பிக் பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு போட்டியாளர்களாக பிரஜின், சாண்ட்ரா, திவ்யா மற்றும் அமித் ஆகியோர் நுழைந்த போது மிகப்பெரிய ஒரு மாற்றம் நிகழும் என்று தான் பார்வையாளர்களைப் போல உள்ளே இருந்த போட்டியாளர்களும் எதிர்பார்த்தனர். ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள் என்னென்ன குறைகளை எல்லாம் வருவதற்கு முன்பு அவர்கள் சொன்னார்களோ அதை அனைத்தையும் தற்போது அவர்கள் வீட்டிற்குள் செய்து கொண்டிருக்கின்றனர்.

பிக் பாஸ் வீட்டிற்குள் குரூப்பிம் இருப்பதாகவும் அப்படி இருக்கும் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வெளியே அனுப்ப வேண்டும் என்றும் சாண்ட்ரா ஆரம்பத்தில் பேசியிருந்தார். முதல் வாரம் இவர்களின் ஆட்டம் நன்றாகத் தான் இருந்தது. அடுத்தடுத்து நாட்களில் தான் இவர்கள் மூன்று பேரும் ஒரு குழுவாக சேர்ந்து மற்ற அனைவரையும் காலி செய்யும் படி விளையாடிக் கொண்டிருந்தனர்.

திவ்யா யாரைப் பற்றி பாராட்டாமல் யாரிடமும் சிரிக்க கூட செய்யாமல் கோபத்தில் தான் அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதே போல சாண்ட்ராவோ பலரை ஒருமையில் பேசுவதும் சில நேரங்களில் பிக் பாஸை எதிர்த்து பேசுவதும் மோசமான வார்த்தைகளையும் பயன்படுத்துவதுமாக இருந்து வருகிறார். இவர்கள் ண்டு பேரையும் விட பிரஜின் ஒரு படி மேலே போய் பலரிடமும் காலி செய்து விடுவேன், அவ்வளவுதான் உனக்கு என கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தி அதிக வெறுப்புகளையும் சம்பாதித்து கடந்த வாரம் விஜய் சேதுபதியிடம் இருந்தும் வாங்கி கட்டிக் கொண்டார்.

பிக் பாஸில் இருக்கும் தவறுகளை சுட்டிக்காட்டி உள்ளே நுழைந்த இந்த மூன்று பேரும் இப்போது அதையே திருப்பி செய்து கொண்டிருப்பதுடன் மட்டுமில்லாமல் மற்ற அனைவரையும் சக போட்டியாளர்களாக பார்க்காமல் இவர்கள் குரூப்பாக சேர்ந்த ஆடுவதை பார்க்கும் போது இவர்கள் என்ன போட்டியாளர்களா இல்லையென்றால் பிக் பாஸ் நீதிபதிகளா என பார்வையாளர்கள் மத்தியில் கேள்வி எழாமல் இல்லை.

இதற்கு மத்தியில் தான் மற்ற போட்டியாளர்களிடம் பிரஜின் மிக மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி வருகிறார். அதிலும் சுபிக்ஷா, வியானா ஆகியோரை பார்த்து காலி பண்ணி விடுவேன், என்கிட்ட பேசுனா வேற மாதிரி ஆயிடும் என்பது போன்ற வார்த்தைகளை பேசுவது பலருக்கும் வெறுப்பை ஏற்படுத்தி வருகிறது. அப்படி ஒரு சூழலில் தான் தன்னிடம் இது போல பிரஜின் பேசினால் நான் என்ன செய்வேன் என அரோரா சில அதிரடி கருத்துக்களை கூறியுள்ளார்.

என்கிட்ட மட்டும் பிரஜின் காலி பண்ணிடுவேன்ன்னு சொல்லிட்டு வரட்டும்.. அவ்ளோ தான். பண்ணிக் காட்டு தொட்டு பாருன்னு தான் சொல்லுவேன். என்னை பத்தி ஏதாவது சொன்னா எனக்கு கோபம் வந்துரும்என அரோரா சொன்னதும்அப்போ மத்தவங்கள சொன்னா பரவாயில்லயாஎன FJ கேட்கிறார். இதன் பின்னர் பேசும் அரோரா, “அப்படி இல்ல, எனக்கு ப்ரஜின் அப்படி சொன்னது செம ஷாக். நான் போய் அவர் சட்டை புடிக்க முடியுமா?. ஆனா என்னை சொன்னா முடிஞ்சத பண்ணுன்னு சொல்லிடுவேன்.

வியானா, சுபிக்ஷா அவரை எப்படி லேசா விட்டாங்கன்னு தெரியல.. ஆனா என்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். என்கிட்ட வாய் விட்டுட வேணாம். பிரஜின் என்ன பண்ணாலும் அப்போவே கேக்கணும். என்கிட்ட அப்படி சொன்னாருன்னா, ‘என்ன Moral இருக்கு. என் வயசு என்ன, உங்க சைசு என்ன?. காலி பண்ணிடுவாங்கன்னா உங்க Language என்னனு காமிங்கன்னு அவர்கிட்ட விளக்கம் கேப்பேன்என FJ மற்றும் விக்ரமிம் அரோரா தெரிவித்துள்ளார்.