காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் அனந்த சரஸ் குளத்தில் இருந்து 40வருடங்களுக்கு ஒரு முறை அத்திவரதர் காட்சி தருகிறார். கடந்த 1979ல் இவ்விழா நடந்த போது அப்போது இவ்வளவு மீடியாக்கள் தகவல் தொடர்பு இல்லாததால் அப்போது மிக குறைவான அளவிலேயே மக்கள் தரிசித்தனர்.
இப்போது மீடியாக்கள் சமூக வலைதளங்கள் அசுரவளர்ச்சியடைந்துள்ளதால் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை பார்க்க முடிகிறது.
அத்திவரதரை ஒரு நாளைக்கு இரண்டரை லட்சம் பக்தர்கள் தரிசித்து இருக்கிறார்கள். பல ஆயிரம் காவலர்கள், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், எஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள் என வரலாறு காணாத அளவிலே பல பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் இவ்வளவு நாட்கள் பிரமாண்டமாக எந்த ஒரு வைபவமும் நடக்கவில்லை இவ்வளவு அதிகாரிகள் பாதுகாப்பிலும் ஈடுபடவில்லை. இவ்வளவு மக்கள் கூட்டமும் குவிந்ததில்லை.
இதுவரை பல கோடி மக்கள் தரிசனம் பெற்ற அத்திவரதர் நாளையுடன் அனந்த சரஸ் குளம் செல்கிறார்.
இன்றுடன் தரிசனம் கடைசி நாள் என்பதால் மக்கள் குவிந்து வருகின்றனர். போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.
இனி 2059ம் ஆண்டுதான் அத்திவரதரை தரிசிக்க முடியும்.