40 ஆண்டுகளுக்கு ஒரு முறை பாதாள அறைக்குள் இருந்து வெளிவரும் அத்திவரதரை இதுவரை பல கோடி மக்கள் தரிசித்து விட்டனர். நேற்றுடன் அத்திவரதர் தரிசனம் நிறைவுக்கு வந்த நிலையில் இன்று அத்திவரதர் இரவு 10 மணியளவில் பாதாள அறைக்குள் வைக்கப்படுகிறார்.
இனி 2059ல் தான் அத்திவரதரை பார்க்க முடியும்.
இன்று தண்ணீருக்குள் பாதாள அறையில் வைக்கப்படும் அத்திவரதர் எப்படி வைக்கப்படுவார் என்பது பற்றி கோவில் அர்ச்சகர் மனம் திறந்துள்ளார்.
பச்சை கற்பூரம், ஏலக்காய், லவங்கம், சாதிக் காய், சாம்பிராணி, வெட்டிவேர், சந்தனாதி தைலம் ஆகியவற்றை காய்ச்சி வடிகட்டி அந்த தைலம் அத்திவரதர் சிலை மீது பூசப்படுமாம்
பின்பு அத்தி மரத்திலான சிலை என்பதனால் அதை தண்ணீருக்குள் வைக்கும்போது அடுத்த 40 ஆண்டுகள் மிக ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும் அல்லவா? அதனால் அறிவியல் ரீதியாகவும், சாஸ்திர ரீதியாகவும் பார்த்து வைக்கப்படுகிறது பாம்பு, மீன் போன்றவை
சிலை மீது உரசும்போது சேதம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதுபோன்ற தைலங்கள் பூசப்படுவதால் மீன், பாம்பு போன்றவை சிலைக்கு அருகே செல்லாது. இன்று மாலை நித்தியப்படி பூஜை முடிந்தபிறகு அத்திவரதருக்கு பட்டு வஸ்திரம் அணிவிக்கப்படும்.
இரவு 10 மணியில் இருந்து 12 மணிக்குள் அனந்தசரஸ் குளத்திற்குள் அத்திவரதர் சிலை சயன நிலையில் வைக்கப்படுவார் செங்கல் தரையில்தான் அத்திவரதர் இருப்பார். சிலையின் தலைக்கு அடியில் கருங்கல் இருக்கும். சிலை வைக்கப்படும்போது வேறு யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இது அந்தரங்க விஷயம்.
சிலை உள்ளே இருந்து எடுக்கும்போதும் கூட மாவட்ட கலெக்டர், எஸ்.பி போன்றவர்கள் தூரத்தில் தான் இருந்திருக்கின்றனர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு பிறகு அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.