40 கதை கேட்டு தூங்கிய அஸ்வினின் என்ன சொல்ல போகிறாய் விமர்சனம்- பில்டப் கொடுத்த அளவு படம் உள்ளதா

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் அஸ்வின். இந்த நிகழ்ச்சியில் இவர் பிரபலமானதால் வெகு சீக்கிரமே  என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. ஆனால் கிடைத்த வாய்ப்பை…

enna solla pogiray

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் அஸ்வின். இந்த நிகழ்ச்சியில் இவர் பிரபலமானதால் வெகு சீக்கிரமே  என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது.

ஆனால் கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொள்ளாமல் ஆடியோ வெளியீட்டின்போது நான் நாற்பது கதை கேட்டு தூங்கிட்டேன் கடைசியில் இந்த கதைதான் பிடித்திருந்தது என அறிமுக நடிகர் என்ற நினைவில்லாமல் தெனாவெட்டாக இவர் பேசியது இவருக்கு மிகுந்த கெட்ட பெயரை ஏற்படுத்தியது.

தற்போது பொங்கலுக்கு இவர் நடித்துள்ள என்ன சொல்ல போகிறாய் திரைப்படம் வெளிவந்துள்ளது.

படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.

ஹரிஹரன் இயக்கியுள்ள இந்த படத்தில் அஸ்வின் ஆர்.ஜேவாக நடித்துள்ளார்.  அவருக்கு மனைவியாக வரப்போகும் பெண்ணின் மீது எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அப்படி உள்ள நிலையில் அவரது தந்தையும் அவந்திகா மிஸ்ராவை அஸ்வினுக்கு திருமணம் முடித்து வைக்க நினைக்கிறார். ஆனால் அவந்திகா மிஸ்ராவுக்கு தனக்கு வரும் கணவனுக்கு ஒரு  முன்னாள் காதல் கதை இருக்க வேண்டும் என வித்தியாசமான மைண்ட் செட் உள்ளது.

இதை உணர்ந்த அஸ்வின் அவந்திகாவை கவர தனக்கு தெரிந்த தியேட்டர் நடிகையான தேஜூ அஸ்வினியை அறிமுகம் செய்து வைத்துவிடலாம் என எண்ணி அவர்தான் தன் முன்னாள் காதலி என அவந்திகாவிடம் சொல்கிறார்.

ஆனால் உண்மையில் அவந்திகாவை விட்டு விட்டு தேஜு அஸ்வினி மீது அஸ்வினுக்கு காதல் பிறக்கிறது.

இதனால் என்ன ஆகிறது என்பதே கதை.

ரொம்ப குழப்பமான கதை. முதல் பாதி படம் சுமாராக போகிறது. ரொமான்ஸ் காட்சிகள் படத்திற்கு பலம் சேர்க்கிறது.

விவேக் மெர்வின் பின்னணி இசை அருமையாக உள்ளது. படம் சொல்லிக்கொள்ளும்படி பெரிய நிறைவாக இல்லை.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன