இயக்குனர் வெற்றி மாறனின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் அசுரன். எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு வெளிவந்த இந்த திரைப்படம். பரவலாக ரசிகர்களிடமும் சினிமா விமர்சகர்களிடமும் நல்லதொரு பாராட்டை பெற்றது.
இந்த படத்தில் தனுசுடன் தமிழில் ஜோடி சேர்ந்திருந்தவர் மலையாள நடிகை மஞ்சு வாரியர். இவரின் நடிப்பு படத்துக்கு பலம் சேர்த்திருந்தது.
சவாலான கதாபாத்திரமான இந்த பாத்திரத்தை ஏற்று நடித்ததன் மூலம் தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
இந்த நிலையில் இந்த அசுரன் படத்தை தெலுங்கில் வெங்கடேஷ் நடிக்க தயாராக இருக்கிறது. ஜோடியாக நடிக்க ஸ்ரேயாவிடம் பேசப்பட்டு மஞ்சு வாரியர் நடித்த கதாபாத்திரத்தில் ஸ்ரேயா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.