கடந்த 4ம் தேதி ரிலீஸ் ஆன அசுரன் திரைப்படம் நான்கு நாட்களுக்குள் மிகப்பெரிய வரலாற்றையும் வசூலையும் பெற்றுள்ளது என கூறலாம்.
பத்திரிக்கைகள், சமூக வலைதளங்கள் என பலரும் இப்படத்தை பாராட்டி வரும் வேளையில் நெல்லை காவல் துணை ஆணையர் சரவணனனும் இப்படத்தை பாராட்டியுள்ளார்.
தனுஷ் கதாபாத்திரம், ஜிவி பிரகாஷ் இசை, வெற்றிமாறன் இயக்கம் என எல்லாமே நன்றாக இருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருக்கிறார் சரவணன்.
“வெள்ளத்தால் போகாது,
வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது,
கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது
காவலோ மிக எளிது
கல்வி என்னும் பொருள்”
என்பதன் வெற்றிமாறன் திரைமொழி வெர்சன் தான் அசுரன் .
கரிசல் எழுத்தாளர் பூமணியின் “வெக்கை” நாவலை இவ்வளவு சுவாரசியமாக எடுக்க முடிந்ததால் இன்னும் பல தமிழ் நாவல்கள் திரைப்படமாக்கலாம் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறார் வெற்றிமாறன் .
பூமணிக்கு சாகித்ய அகாடமி விருது பெற்று தந்த அஞ்ஞாடி நாவலையும் படமாக்கினால் சிறப்பு என கூறியுள்ளார் சரவணன்.
மேலும் அவர் கூறுகையில்
நெல்லை வட்டார வழக்கு வசனம் மிக அருமை.
“பகையை வளர்ப்பதை விட அதை கடப்பதே முக்கியம்
ஒரே மண்ணில் பிறக்கிறோம்.
ஒரே மொழியை பேசுகிறோம்.
இது ஒன்று போதாதா எல்லோரும் சேர்வதற்கு “
என்ற சிவசாமியின் ஆசை நிறைவேறும் நாளுக்காக
காத்திருப்போம் என டுவிட் செய்துள்ளார் சரவணன்.