அசோக்செல்வன் நடித்த அந்த Script எனக்கு தான் வந்தது… ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்…

By Meena

Published:

ஹரிஷ் கல்யாண் தமிழ் சினிமாவில் பணியாற்றும் நடிகராவார். 2019 இல் சிந்து சமவெளி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் ஹரிஷ் கல்யாண். அடுத்ததாக பொறியாளர், வில்லம்பு ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.

அதற்குப் பிறகு 2017 ஆம் ஆண்டு விஜய் டிவி நடத்திய ரியாலிட்டி ஷோ ஆன பிக் பாஸ் சீசன் ஒன்றில் தோன்றி அதன்மூலம் பிரபலம் அடைந்தார் ஹரிஷ் கல்யாண். அதற்கு பிறகு அவருக்கு நல்ல சினிமா வாய்ப்புகள் அமைந்தது. 2018 இல் பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தில் நடித்து திருப்புமுனையை பெற்றார் ஹரிஷ் கல்யாண்.

தொடர்ந்து இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தாராளபிரபு, ஓ மன பெண்ணே, பார்க்கிங் தற்போது லப்பர் பந்து ஆகிய திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை பிடித்திருக்கிறார் ஹரிஷ் கல்யாண்.

மீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட ஹரிஷ் கல்யாண் ப்பர் பந்து திரைப்பட அனுபவங்களை பற்றி பேசும்போது முதலில் அசோக் செல்வன் நடித்த ப்ளூ ஸ்டார் திரைப்படத்தின் ஸ்கிரிப்ட் எனக்கு தான் வந்தது. அசோக் செல்வன் கேரக்டரில் நடிக்க சொல்லி கேட்டாங்க. அவங்க ஸ்கிரிப்ட் கொண்டு வருவதற்கு முன்னாடியே நான் ப்பர் பந்து படத்துக்காக சைன் பண்ணிட்டேன். நான் எதுக்காக அந்த படம் வேண்டாம் அப்படின்னு நினைச்சேன்னா ப்பர் பந்து படம் கிரிக்கெட்டை மையமா வச்ச ஒரு படம் தான். ப்ளூ ஸ்டார் படமும் கிரிக்கெட் பேஸ் பண்ண ஒரு படம் ரெண்டும் அட்ட டைம்ல நான் பண்ணுனா ஏதாவது ஒரு படம் பாதிக்கும். அதனாலதான் நான் அந்த ஸ்கிரிப்ட்டை எடுக்கல என்று ஓபன் ஆக கூறியிருக்கிறார் ஹரிஷ் கல்யாண்.