சூர்யா நடிப்பில் ஹரி இயக்கத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளிவந்த ’வேல்’ என்ற திரைப்படத்தில் சூர்யா, அண்ணன் தம்பி என்ற இரண்டு வேடத்தில் நடித்திருப்பார் என்பதும் இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது என்பதும் தெரிந்தே
இந்த நிலையில் தற்போது ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படமும் இரண்டு சகோதரர்கள் குறித்த செண்டிமெண்ட் கதை என்று தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து வேல் படத்தின் இரண்டாம் பாகமாக அருவா படம் இயக்கலாம் என்று கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இருப்பினும் இந்த தகவலை படக்குழுவினர் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
சூர்யாவுக்கு ஜோடியாக இந்த படத்தில் ராஷ்மிகா மற்றும் நிக்கி கல்ராணி நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது