ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்க அருவா என்ற படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் சிங்கம் , சிங்கம் 2, சிங்கம்3 என்ற படங்களின் வெற்றிக்கு பிறகு ஹரியுடன் அருவா படத்தில் சூர்யா இணைவதால் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் படத்துக்கு வைக்கப்பட்டுள்ள அருவா என்ற பெயர் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இந்த பெயர் பாடலாசிரியர் ஏகாதசி அருவா’ என்ற பெயரில் படம் ஒன்றை இயக்கி முடித்துள்ளார். தருண்கோபி தயாரித்துள்ள இந்தப் படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
படம் இவர்கள் இயக்கி முடித்து விட்டதால் படத்தின் தலைப்பை மாற்ற வாய்ப்பே இல்லை என படக்குழுவினர் கூறிவிட்டதாலும் படத்தின் தலைப்பை மாற்றலாமா என இயக்குனர் ஹரி குழுவினர் யோசனையில் உள்ளனர்.
இருப்பினும் சமீபத்தில் எடுக்கப்பட்ட படத்தின் தலைப்பு இன்னொருவருக்கும் எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது.