எதிர்பார்ப்புடன் வந்த வணங்கான்..! எப்படி இருக்கு? வெளியான விமர்சனங்கள்..

இயக்குநர் பாலாவின் படைப்புகள் என்றாலே சோகம் கலந்த ஒரு முடிவு, அழுக்கு உடைகள், வித்தியாசமான மனநிலை கொண்ட ஹீரோ, மனசாட்சியே இல்லாத வில்லன் என அக்மார்க் பாலா படமாக வெளிவந்திருக்கிறது வணங்கான். இதுவரை ஆக்ஷன்…

Vanangaan

இயக்குநர் பாலாவின் படைப்புகள் என்றாலே சோகம் கலந்த ஒரு முடிவு, அழுக்கு உடைகள், வித்தியாசமான மனநிலை கொண்ட ஹீரோ, மனசாட்சியே இல்லாத வில்லன் என அக்மார்க் பாலா படமாக வெளிவந்திருக்கிறது வணங்கான். இதுவரை ஆக்ஷன் படங்களில் அதகளப்படுத்திக் கொண்டிருந்த அருண் விஜய்க்கு பாலாவின் பள்ளிக் கூடம் புது சினிமா மொழியைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. இனி அருண் விஜய்யை வித்தியாசமான கதாபாத்திரங்களில் பார்க்கலாம். என்னை அறிந்தால் படம் எப்படி அருண் விஜய்க்கு கம்பேக் கொடுத்ததோ அதேபோல் வணங்கான் அடுத்த பரிணாமத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது.

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், ஜி.வி. பிரகாஷ்குமார் இசையில் பொங்கல் வெளியீடாக வெளிவந்திருக்கும் வணங்கான் திரைப்படம் மாற்றுத்திறனாளிகள் மீதான வன்முறை கதைக்களத்தினைக் கையில் எடுத்திருக்கிறது. கோபக்கார அருண் விஜய், பாசமான தங்கை, கன்னியாகுமரி கடல் இவை மூன்றும் தான் படமே. இயக்குநர் பாலா தனது மேக்கிங்கில் சோடை போகவில்லை. சூர்யா நடித்திருந்தால் அவரின் மார்க்கெட்டுக்காக சிலவற்றை பாலா விட்டுக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் சூர்யா நடிக்காமல் விட்டது ஒருவகையில் நல்லது தான்.

அருண் விஜய் தனது கதாபாத்திரத்தைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார். மிஷ்கின், சமுத்திரக்கனி, ரோஷினி, ரிதா என இதர நடிகர்கள் தனித்துத் தெரிகின்றனர்.

https://x.com/LetsXOtt/status/1877641470061985846

Vanangaan

https://x.com/sekartweets/status/1877698837243887798

Vanangaan 1

https://x.com/iam_Tharani/status/1877691322376860121

Vanangaan 3

https://x.com/studiocelluloid/status/1877682046723653762Vanangaan 4