சன் தொலைக்காட்சியில் நேற்று பாண்டவர் பூமி திரைப்படமானது ஒளிபரப்பானது, இந்தப் படத்தை பார்த்த சேரன் இந்தப் படம் குறித்துப் பேசியதோடு, அருண் விஜய்க்கு தனது வாழ்த்துகளையும் பதிவிட்டுள்ளார்.
அதாவது இயக்குனர் சேரன் ட்விட்டரில் ட்விட்டரில், “இன்று சன் தொலைக்காட்சியில் பாண்டவர் பூமி திரைப்படத்தினைப் பார்த்தேன். அருண் விஜய் என்ற பெயரை சினிமா உச்சரிக்க ஆரம்பித்த முதல் படம் பாண்டவர் பூமி என நினைக்கிறேன். உங்கள் தன்னம்பிக்கையும் முயற்சியும்தான் இன்று நீங்கள் இருக்கும் இடத்திற்கு உங்களைக் கொண்டு வந்துள்ளது.
பல கோடி ரசிகர்களைக் கவர்ந்துள்ள நீங்கள் இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும். நான் நிச்சயம் அதனைக் கண்டு மகிழ்ச்சி கொள்வேன். நீங்கள் கடந்த பாண்டவர் பூமி எனும் மைல்கல்லில் அமர்ந்தபடி. நன்றிகள் பல.” என்று பதிவிட்டுள்ளார்.
இயக்குனர் சேரனின் வாழ்த்துகளை ஏற்றுக்கொண்ட அருண் விஜய் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார். அதாவது “என்றும் என் மனதில் ஒரு மைல்கல்லாக நிலைத்து நிற்கும் படம் பாண்டவர் பூமி. அந்தப் படத்தில் நான் பல அடிப்படை நுணுக்கங்களை கற்றுக் கொண்டேன்.
அதனைக் கற்றுக்கொடுத்தவர் நீங்கள். படப்பிடிப்பு நேற்றுதான் நிறைவுபெற்றது போல் உள்ளது. உங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு என்னுடைய நன்றி. பயணம் இன்னும் நீண்டதாக உள்ளது” என்று கூறியுள்ளார்.