நடிகர் அருண் விஜய் தமிழ் சினிமாவில் 90 களில் அறிமுகமான போதிலும், அவருக்குப் பெரிய அளவில் நடிக்கும் வாய்ப்புகள் கைகொடுக்கவில்லை விஜயகுமாரின் மகன் என்ற முறையில் கலை வாரிசாக அறிமுகமான இவருக்கு அமைந்த படங்கள் அனைத்துமே தோல்விப் படங்கள்தான். 2009 இல் வெளிவந்த மலை மலை, 2010 இல் வெளிவந்த மாஞ்சா வேலு போன்ற படங்கள் பெரிய அளவில் தோல்வியை சந்தித்தன.
இவர் நடிப்பினை விட்டு விலகி விட்டார் என்று எண்ணி இருக்கையில், அவ்வப்போது ஒரு படம் கொடுப்பார். அதன்பின்னர் 2017 ஆம் ஆண்டில் இருந்து இவருக்கு பெரிய அளவிலான வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. 2018 ஆம் ஆண்டு இன்னொருபடி மேலே போய், 4 படங்கள் இந்த ஒரு வருடத்தில் நடித்தார்.
மாஃபியா படத்தில் இவரது நடிப்பு சிறப்பாகப் பேசப்பட்டது, அதேபோல் தற்போது அக்னி சிறகுகள்’, சினம் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.
தற்போது அருண் விஜய் ட்விட்டரில் உடற்பயிற்சி செய்த போது தவறி கீழே விழுந்த வீடியோவைப் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவின் கீழ் கேப்ஷனாக, இதுபோன்ற முயற்சிகளை செய்வது கூடாது.
கீழே விழுந்த பின்னர், ஒரு வார காலம் என்னால் நடக்க முடியவில்லை. எலும்பில் முறிவு இருக்கும் என நான் நினைத்தநிலையில், கடவுள் கிருபையால் அப்படி எந்த விஷயமும் நடக்கவில்லை. கடவுளுக்கு நன்றி. உடற்பயிற்சி செய்யும்போது கவனமாக இருங்கள்” என்று கூறியுள்ளார்.