எண்பதுகளில் கரையெல்லாம் செண்பகப்பூ, கல்யாணராமன் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் ஜி.என் ரங்கராஜன் இவர் கடைசியாக இயக்கிய படம் கமல்ஹாசனை வைத்து மகராசன் என்ற படம். இந்த படம் வந்தே இருபது வருடங்களுக்கும் மேல் ஆகிறது.
இவரது சினிமா வாரிசாக வந்தவர்தான் இவரது மகன் ஜி. என் ஆர் குமரவேலன்.
இவர் பிரித்விராஜ், பிரியாமணி நடித்த நினைத்தாலே இனிக்கும், வாகா, யுவன் யுவதி, ஆட்டிசம் பற்றிய படமான ஹரிதாஸ் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
இவர் புதிதாக படம் ஒன்றை இயக்குகிறார். இதில் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் டைட்டில் என்ன என்று இன்று அறிவிக்கப்படுகிறது.