பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டி வரும் நிலையில் தற்போது 95 நாட்களைக் கடந்து மிக அமர்க்களமாக சென்று கொண்டிருக்கிறது. தமிழில் எட்டாவது பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமான சமயத்தில் பார்வையாளர்கள் மத்தியில் ஒரு சலிப்பு தான் உருவாகி இருந்தது. அந்த அளவுக்கு பல போட்டியாளர்கள் எந்த டாஸ்க்கிலும் விருப்பம் காட்டாமல் ஏன் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தோம் என்பது போல தான் தங்களது விளையாட்டை செயல்படுத்தி இருந்தனர்.
ஆனால் நாட்கள் செல்ல செல்ல ஒவ்வொரு போட்டியாளர்களும் தாங்கள் செய்யும் தவறுகளை உணர்ந்து கொண்டு பிக் பாஸ் வீட்டின் சுவாரசியத்தை அறிந்து அதற்கேற்ப தங்களது ஆட்டத்தையும் நகர்த்தி இருந்தனர். அந்த வகையில் கடந்த 40, 50 நாட்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி மிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் எதிர்பாராத சில முடிவுகளும் அரங்கேறி வருகிறது.
இரண்டு பேர்
கடந்த இரண்டு வாரங்களுக்குள் ஜெஃப்ரி, அன்ஸிதா, ராணவ் மற்றும் மஞ்சரி ஆகிய 4 பேர் அடுத்தடுத்து வெளியேறி இருந்தனர். இதில் ஒரு சிலர் ஃபைனல் வரை முன்னேற தகுதி உள்ளவர்கள் என பலரும் குறிப்பிட்டு தான் வந்தனர். ஆனால், வாக்கு உள்ளிட்ட பல விஷயங்கள் அவர்களுக்கு பாதகமாகவும் மாறி இருந்தது. இதனைத் தொடர்ந்து 100 நாட்களை எட்டுவதற்கு முன்பாக இரண்டு பேர் எலிமினேட் ஆவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தது.
முத்துக்குமரன், ஜாக்குலின், தீபக், சவுந்தர்யா, விஜே விஷால், அருண் பிரசாத், பவித்ரா ஆகியோர் தற்போது இருக்க, ரயான் பைனலுக்கும் முதல் ஆளாக முன்னேறி இருந்தார். இதனிடையே, ஃபைனல் சுற்றிற்கு ரயானை தாண்டி முத்து, சவுந்தர்யா, ஜாக்குலின் மற்றும் தீபக் ஆகிய 4 பேர் முன்னேறுவார்கள் என்றும் பலர் எதிர்பார்த்து வருகின்றனர்.
தீபக் எலிமினேட்டா?..
இந்த நிலையில் தான் முதலில் அருண் பிரசாத்தும் அதை தொடர்ந்து தீபக்கும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மற்ற அனைத்து போட்டியாளர்களுக்கு வெளியே PR மூலம் மிக மும்முரமாக இயங்கி வரும் சூழலில், பிக் பாஸ் வீட்டில் தனது ஆட்டத்தின் மூலமே கவனம் ஈர்த்தவர் தான் தீபக். அருண், விஷால், பவித்ரா உள்ளிட்ட பல போட்டியாளர்களை தாண்டி ஃபைனல் வரை முன்னேறுவதற்கான அனைத்து தகுதிகளும் தீபக்கிடம் உள்ளது.
அப்படி இருந்தும் அவர் நன்றாக ஆடிக் கொண்டிருக்கும் நேரத்தில் எப்படி அவரை எலிமினேட் செய்யலாம் என பிக் பாஸ் பார்வையாளர்கள் கொந்தளித்து வருகின்றனர். மேலும் இது நியாயமே இல்லாத எலிமினேஷன் என்பதும் பலரின் கருத்தாக உள்ளது.