Bigg Boss Tamil Season 8 : ஜெஃப்ரியை தரக்குறைவாக பேசிய அர்னவ்.. துணிச்சலாக சௌந்தர்யா கேட்ட கேள்வி

பிக் பாஸ் வீட்டிற்குள் ஆறு போட்டியாளர்கள் தற்போது இருக்க, அவர்களை தாண்டி பழைய போட்டியாளர்களும் மீண்டும் விருந்தினர்களாக உள்ளே வந்து தங்களது ஆட்டத்தை நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர். இதில் ஒரு சில போட்டியாளர்கள் ஃபைனலுக்கு செல்வார்கள்…

Soundarya Questions Arnav

பிக் பாஸ் வீட்டிற்குள் ஆறு போட்டியாளர்கள் தற்போது இருக்க, அவர்களை தாண்டி பழைய போட்டியாளர்களும் மீண்டும் விருந்தினர்களாக உள்ளே வந்து தங்களது ஆட்டத்தை நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர். இதில் ஒரு சில போட்டியாளர்கள் ஃபைனலுக்கு செல்வார்கள் என கருதப்படும் பிளேயர்களை எதிர்த்து சாமர்த்தியமாக டி அவர்களது தன்னம்பிக்கையை உடைக்கும் மோசமான வழியிலும் பயணித்து வருகின்றனர்.

இதற்கு மத்தியில் தான் பிக் பாஸ் வீட்டில் அதிகம் அறிமுகம் இல்லாமல் களமிறங்கி இருந்த ஜெப்ரி, கடந்த சில வாரங்களுக்கு முன்பு எலிமினேட்டாகி மக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றிருந்தார். இதனிடையே இரண்டாவது வாரத்திலேயே வெளியேறி இருந்த அர்னவ், மீண்டும் உள்ளே வந்ததும் தேவை இல்லாமல் தரக்குறைவாக ஜெஃப்ரி பற்றி பேசி இருந்தார். அதுவும் மற்ற பெண் போட்டியாளர்களை தொடுவது, தடவுவது என ஈடுபட்டதாக ஜெப்ரி பற்றி அர்னவ் கூற, முத்து, சௌந்தர்யா, ஜாக்குலின் உள்ளிட்ட பலரும் இப்படி பிக்பாஸ் வீட்டிற்குள் பேசுவது தவறு என்றும் இதை நிறுத்தி விடுங்கள் என்றும் அர்வை எச்சரித்திருந்தனர்.

ஜெப்ரியின் தரமான பதிலடி

இதனிடையே, அர்வ் இப்படி பேசியதை வெளியே இருந்து கவனித்திருந்த ஜெஃப்ரி, பிக் பாஸ் வீட்டிற்குள் வந்ததும் இப்படி தன்னை பற்றி பேசியதை மிக மறைமுகமாக பதிலடி கொடுத்ததுடன் மட்டுமில்லாமல் அர்வின் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் சொல்லி இருந்தார். இதனை கவனித்த அர்னவ், எதுவும் பேச முடியாமல் சிரித்துக் கொண்டே இருந்தார் அர்னவ். இந்த நிலையில், தற்போது ஜெஃப்ரி பற்றி பேசியதற்கு சௌந்தர்யாவும் அவருக்கு ஒரு பதிலடி கொடுத்துள்ளார்.

ஜெப்ரி பற்றி சௌந்தர்யாவுடன் பேசிக் கொண்டிருக்கும் அர்னவ், “நீங்கள் உள்ளே செல்லும் போது வெளியே இருந்து வருவதால் என்ன வேண்டுமானாலும் கேட்கலாம் என பிக் பாஸ் என்னிடம் கூறி இருந்தார். அதே போல மக்கள் பலரும் என்னிடம் கேட்ட கேள்வியை தான் நான் இங்கே வந்து ஜெப்ரியை பற்றி பேசி இருந்தேன். அனைத்து எபிசோடுகளையும் பார்க்காததால் விஜய் சேதுபதி சார் உள்ளிட்ட யாருமே ஜெஃப்ரி நடவடிக்கைகளை பற்றி கேள்வி எழுப்பவில்லை என மக்கள் கூறி இருந்தனர்.

ப்ரெண்ட்ஸ் மாதிரி..

அதனால் தான் அந்த கேள்வியை நான் உள்ளே வந்து பிரதிபலித்திருந்தேன்”என அர்னவ் தனது விளக்கத்தை கூறுகிறார். இந்த கருத்தை ஏற்றுக் கொள்ளாத சௌந்தர்யா, “இது மக்களின் கேள்வியாக எனக்கு தோன்றவில்லை. அவர்கள் வெளியே ஆயிரம் பேசட்டும். ஆனால் இந்த கேள்வி உங்களுடையதாக தான் நான் பார்க்கிறேன்.

பொதுவாக இரண்டு நண்பர்கள் பேசும் போது தோள் மீது கை போட்டுக் கொண்டு எல்லாம் இருப்பது போல தான் ஜெப்ரியும் இருந்தார்என்றும் சவுந்தர்யா சொல்கிறார்.